Efforts Never Fail: ரசிகர்களுக்கு தீனி போட்ட ஏகே.. அட்டகாசமாய் வெளியான விடாமுயற்சி செகண்ட் லுக்

Vidaamuyarchi second look: அஜித் குமார் நடிக்கும் விடாமுயற்சி படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் நேற்று சத்தமில்லாமல் வெளியாகி இருக்கிறது. இந்த போஸ்டர் அறிவிப்பை அஜித்தின் மேனேஜர் அறிவித்திருந்தார். மேலும் செகண்ட் லுக் போஸ்டர் இரண்டு புகைப்படங்களாக வெளியாகி இருக்கிறது.

இந்த இரண்டு சம்பவங்களை பார்க்கும்போதே அஜித்தின் ரசிகர்கள் அதிருப்தியில் இருப்பது ஒட்டுமொத்த படகுகளுக்கும் தெரிந்து விட்டது என்பது நன்றாக தெரிகிறது. கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக காத்திருந்த ரசிகர்களுக்கு விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது.

Vidaamuyarchi 1st look
Vidaamuyarchi 1st look

அஜித் கையில் ஒரு பையுடன் ரோட்டில் நடந்து செல்வது போல் அந்த போஸ்டர் வெளியானது. இணையவாசிகள் அதை பங்கமாக கலாய்த்து விட்டார்கள். பாரதி கண்ணம்மா சீரியல் கண்ணம்மாவுடன் ஒப்பிட்டு எல்லாம் ட்ரோல் பண்ண ஆரம்பித்து விட்டார்கள்.

அட்டகாசமாய் வெளியான விடாமுயற்சி செகண்ட் லுக்

இதனால் அஜித் ரசிகர்கள் கடும் அப்செட்டில் இருந்தார்கள். எனவே அவர்களை குஷிப்படுத்தும் வகையில் நேற்று இரண்டு போஸ்டர் வெளியாகி இருக்கிறது. ஒரு போஸ்டரில் அஜித் கார் சேஸிங் செய்வது போல் இருக்கிறது.

Vidaamuyarchi 2nd look
Vidaamuyarchi 2nd look

இன்னொரு போஸ்டரில் கையில் ஒரு பெரிய துப்பாக்கியை வைத்துக் கொண்டு இன்னொரு கையை தன் நெஞ்சில் வைத்துக் கொண்டு நிற்கிறார். இந்த இரண்டு போஸ்டர்களை பார்க்கும்போதே படம் அதிரடி ஆக்சன் படம் என்பது நன்றாக தெரிகிறது.

Vidaamuyarchi second look
Vidaamuyarchi second look

மேலும் இந்த போஸ்டருக்கு மேல் எஃபெர்ட்ஸ் நெவர் பெயில் என குறிப்பிட்டு இருக்கிறார்கள். அது மட்டும் இல்லாமல் விடா முயற்சி திருவினையாக்கும் என பதிவிட்டு இருக்கிறார்கள். விடாமுயற்சி படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவுக்கு இருக்கிறது.

இந்த படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 2025 ஆம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீசாகும் என தெரிகிறது. இந்த படத்தில் அஜித் மற்றும் த்ரிஷா இருவருக்கும் இடையே அழகான காலேஜ் ஃப்ளாஷ் பேக் காட்சிகளும் இருக்கிறது. மேலும் ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிக் பாஸ் ஆரவ், பிரியா பவானி சங்கர் ஆகியோரும் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள்.

Next Story

- Advertisement -