விடாமுயற்சி படம் பொங்கலுக்கு ரிலீஸ் என்று அறிவித்திருந்தனர். ஆனால் இந்த படம் இன்னும் சென்சார் சர்டிபிகேட் வாங்குவதற்கு அனுப்பவில்லை. எப்படி பார்த்தாலும் அவர்கள் கையில் படம் இரண்டு நாட்கள் இருக்க வேண்டும். இதனால் அந்தப்படம் வெளி வருவதில் சிக்கல்ஏற்பட்டுள்ளது.
இப்பொழுது இந்த படம் உறுதியாக சொன்ன தேதியில் வெளிவர வேண்டும் என லைகா மற்றும் இயக்குனர் மகிழ்திருமேனி கங்கணம் கட்டி திரிகின்றனர். இந்த படத்திற்கு இசை மற்றும் பேக்ரவுண்ட் மியூசிக் எல்லாவற்றையும் அனிருத் அமைத்து வருகிறார்.
சமீபத்தில் அனிருத் விடாமுயற்சி படத்திற்கு இசையமைத்து வரும் போட்டோவை வெளியிட்டு இருந்தார். இப்பொழுது இந்த படத்திற்கான பின்னணியை இசையை ரெடி பண்ணிக் கொண்டிருக்கிறார். இதற்காக இரவும் பகலும் உட்கார்ந்து வேலை செய்து கொண்டிருக்கிறார்.
அனிருத் தரப்பில் குறைந்தது 15 நாட்களாவது வேண்டுமென கேட்கின்றனர். ஆனால் லைக்கா மற்றும் மகிழ் தரப்பிலிருந்து அவருக்கு உச்சகட்ட அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. அனைத்து வேலைகளையும் மூன்று நாட்களுக்குள் முடித்து தரும்படி அவருக்கு பிரஷர் கொடுத்து வருகின்றனர்.
அப்படி மூன்று நாட்களில் அனிருத் முடித்துக் கொடுத்தாலும் டெக்னிக்கலாக அதை ரெடி பண்ணுவதற்கு 15 நாட்களாவது ஆகுமாம். ஆனால் அதையும் மூன்று நாட்களில் முடித்து கொடுக்கும்படி அனிருத்துக்கு உச்சகட்ட அழுத்தம் கொடுத்து வருகிறார்கள். அனிருத்தின் வேலையை எப்படியும் நான்கு நாட்களில் முடித்து பொங்கலுக்கு வெளியிடுவதற்கு கடும் முயற்சி எடுத்து வருகிறார்கள்.