ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

ஹாலிவுட் படத்தை விஞ்சும் விடாமுயற்சி.. மாஸ் லுக்கில் அஜித், இந்தப் படத்துல இவ்ளோ சுவாரஸ்யமா?

எந்த ஒரு படத்திற்கும் இல்லாத எதிர்பார்ப்பு அஜித் நடித்து வரும் விடாமுயற்சி படத்திற்கு எழுந்துள்ளது. ஆனால் இதுவரை எந்த அப்டேட்டும் சொல்லப்படாத நிலையில், இணையதளத்தில் இப்பட டீசர் வெளியாகும் என தகவல் வெளியானது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் விடாமுயற்சி டீசர் வெளியிட்டுள்ளது படக்குழு.

அஜித்குமார் நடிப்பில், மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் படம் விடாமுயற்சி. இப்படத்தில் அர்ஜூன், ரெஜினா, திரிஷா, ஆரவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

ஹாலிவுட் திரில்லர் பட பாணியில் விடாமுயற்சி டீசர்!

இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டருக்குப் பின் இன்று இரவு சன் டிவியில் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் விடாமுயற்சி பட டீசர் வெளியிட்டுள்ளனர். ஏற்கனவே இப்படக் கதை ஹாலிவுட் படமான பிரேக் டவுன் படத்தின் தழுவல் என தகவல் வெளியானது. இதை தமிழுக்கு ஏற்றபடி கொஞ்சம் மாற்றி, இயக்குனர் கதை எழுதியதாக கூறப்பட்ட நிலையில், இப்படத்தின் முன்னோட்டம் இன்று வெளியானது.

அதில், காணாமல் போன தன் மனைவி த்ரிஷாவை தேடிக் கண்டுபிடிக்கும் விடாமுயற்சியில் அஜித் ஈடுபடுவார். அதைத்தால், எல்லோரும், எல்லாரும் கைவிட்டால் உன்னை நம்புன்ன் இதில் மென்சன் பண்ணியிருக்காங்க. இதில், அஜித் ஹாலிவுட் நடிகர் மாதிரி ஸ்டைலாக இருக்கிறார்.

அர்ஜூன் ஒரு கேங் காரின் டிக்கியில் இருந்து ஒரு மனிதரை எடுத்து வெளியே போடுகிறார். திரிஷா ஒரு ஓட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். அர்ஜூன், ரெஜினா மர்ம புன்னகை வீசுகிறார்கள். அதிரடி ஆக்சன் காட்சிகளில் அதிரவைக்கிறார் அஜித். பின்னணி இசையில் பின்னி பெடலெடுத்துள்ளார் அனிருத்.

வசனங்கள் இல்லாமல் பின்னணி இசையுடன் த்ரில்லர், சஸ்பென்ஸ், ஆக்சன் கலந்த கலவையான இப்பட டீசர் அமைந்துள்ளதால், யாருமே எதிர்ப்பார்க்காத நிலையில் அஜித் ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதேசமயம் வசனங்கள் இடம்பெறாமல் டீசருக்காகவே இதை எடிட் செய்தது போல் உள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

ajith-vidamuyarchi-ak
ajith-vidamuyarchi-ak

இந்த டீசர் வெளியாகி 30 நிமிடங்களில் 8 லட்சத்திற்கும் மேலான பார்வைகளைப் பெற்றுள்ளது. 13 ஆயிரம் கமெண்ட்ஸும், 2 லட்சம் பேர் லைக் செய்துள்ளார். இந்த டீசர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் இதை கொண்டாடி ட்ரெண்ட் செய்து வருகின்றனர். விடாமுயற்சி படம் வரும் பொங்கலுக்கு கேம் சேஞ்சருக்குப் போட்டியாக ரிலீசாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

டீசரே இப்படி மாஸாக இருக்கிறது என்றால் ஏற்கனவே சஸ்பென்ஸ் திரில்லர், ஆக்சன் படங்களை இயக்கிய மகிழ்திருமேனி, விடாமுயற்சியில் அஜித் – அர்ஜீன் காம்போவில் கதை சூப்பராக எழுதி, திரைக்கதை வடிவமைத்து, அதில் ஆக்சனில் பட்டையகிளப்பி இருப்பார். இப்படத்தின் படமும் நிச்சயம் பிளாக்பஸ்டர் ஹிட்டத்து ரூ.500 கோடிக்கு மேல் வசூல் குவிக்கும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Trending News