வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

விடாமுயற்சியால் காதலர் தின ரேஸுக்கு வந்த சிக்கல்.. படங்கள் பின்வாங்கினாலும் மீசையை முறுக்கும் பிரதீப் ரங்கநாதன்

யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் விடாமுயற்சி படம் திடீரென பிப்ரவரி 6ஆம் தேதி ரிலீஸ் என்ற அறிவிப்பு வெளிவந்தது. ஹாலிவுட் படங்களுக்கு நிகராக விடாமுயற்சியின் ட்ரெய்லர் வெளிவந்து அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது.

பிப்ரவரி 6 வியாழக்கிழமை இந்த படம் ரிலீஸ் ஆவதால் அதற்கு அடுத்த வாரம் பிப்ரவரி 14 காதலர் தினத்தை குறிவைத்து சில படங்கள் ரிலீஸ் ஆக இருந்தது. இப்பொழுது அந்தப் படங்கள் எல்லாம் அடுத்தடுத்த வாரங்களுக்கு தள்ளி போகிறது.

தமிழ்நாட்டில் ரெட் ஜெயன்ட் மூவிஸ், விடாமுயற்சி படத்தை வெளியிடுவதால் பெரும்பாலான தியேட்டர்கள் அதுக்கு தான் கிடைக்கும். அதனால் சின்ன படங்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ரிலீசாக இருந்த 3 ,4 படங்கள் தள்ளி போனாலும் பிரதீப் ரங்கநாதன் படம் ஒன்று மட்டும் ரிலீசாக உள்ளது.

புல்லட், 100 கோடி வானவில், சப்தம் , கருப்பர் நகரம் போன்ற படங்கள் இந்த பிப்ரவரி மாதம் ரிலீஸ் ஆக இருந்தது. ஆனால் இப்பொழுது விடாமுயற்சி படத்தால் அனைத்து படங்களும் வழிவிட்டு அடங்கி போய் இருக்கிறது.

இந்நிலையில் ஏஜிஎஸ் தயாரித்த படம் மட்டும் திட்டமிட்டபடி பிப்ரவரி 14 ரிலீஸ் ஆக உள்ளது. பிரதீப் ரங்கநாதன்,அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் உருவான படம் டிராகன். இந்த படம் நடப்பது நடக்கட்டும் என மீசையை முறுக்கிக் கொண்டு காதலர் தினத்துக்கு வருகிறது.

Trending News