Vidamuyarchi film collection report before movie release: இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளிவந்த அஜித்தின் துணிவு நேர்மறையான விமர்சனங்களுடன் வசூலை வாரி குவித்தது. துணிவின் வெற்றி செருக்கு தலைக்கு ஏறாவண்ணம் ஒரு நீண்ட இடைவெளி எடுத்து தன் அடுத்த படத்தை கவனமாக தேர்ந்தெடுத்தார்.
அதன்படி ஆக்சன் மற்றும் த்ரில்லரில் தடம் பதித்த இயக்குனர் மகிழ்திருமேனியின் இயக்கத்தில் தனது 62 ஆவது படமான விடாமுயற்சியை பிக்ஸ் செய்தார். அஜித்துடன் அர்ஜூன், திரிஷா, ரெஜினா, ஆரவ் என பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்க அனிருத் இசையமைக்க லைக்கா நிறுவனம் இப்படத்தை தயாரிக்கின்றது.
“விடாமுயற்சி” படத்தின் டைட்டிலிலேயே மொத்த கதையின் கருவை அடக்கி வைத்துள்ளார் இயக்குனர் மகிழ்திருமேனி. பல தடங்களுக்கு பின் 70 நாட்கள் கால்ஷீட் கொடுத்து ஒரு வழியாக படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டு அஜர்பைஜானில் சூட்டிங் நடைபெற்று வருகிறது.
Also read: அதிகாரப்பூர்வமாக அஜித் இயக்குனரை கழட்டிவிட்ட கமல்.. மீண்டும் கார்த்திக்கிடம் தஞ்சம்
வருடத்திற்கு குறைந்தது மூன்று படங்களாவது கொடுக்க வேண்டும் என்று நினைத்த அஜித் விடாமுயற்சியை தமிழ் புத்தாண்டுக்கு ரிலீஸ் செய்ய காத்திருந்தார். படப்பிடிப்பில் ஏற்பட்ட தாமதம், சென்னையில் ஏற்பட்ட வெள்ளம் என பல காரணங்களால் படபிடிப்பு தாமதப்பட்டு ரிலீஸ் தேதி ஏப்ரலில் இருந்து அஜித்தின் பிறந்த நாளான மே ஒன்றுக்கு மாற்றப்பட்டது.
படப்பிடிப்பை விரைவுப்படுத்தும் பொருட்டு வாரத்தின் ஏழு நாட்களும் இரவு பகலாக சூட்டிங் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டி உள்ள நிலையில் படத்திற்கான வியாபாரம் தொடங்கப்பட்டது. அஜித்தின் விடாமுயற்சியை ஓடிடி யில் வெளியிட நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் 150 கோடிக்கும், தொலைக்காட்சி வெளியீட்டு உரிமையை சன் டிவி 100 கோடிக்கும் வாங்கி உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
இதனால் படத்தை வெளியிடுவதற்கு முன்பாகவே 250 கோடி வசூல் என்பது மொத்த பட குழுவினரையும் மகிழ்ச்சியில் திளைக்க வைத்துள்ளது. இந்த வெற்றி அஜித்தின் விடாமுயற்சிக்கு கிடைத்த வெற்றியே.
Also read: 2023-ல் ஓடிடி-யில் அதிகம் பார்க்கப்பட்ட 5 படங்கள்.. 2.5 கோடி பார்வையாளர்களைக் கவர்ந்த அஜித்