Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

கடவுளே! அஜித்தே.. சம்பவம் இருக்கு.. ஆனா இது பத்தாதாம்

கடவுளே! அஜித்தே.. சம்பவம் இருக்கு.. ஆனா இது பத்தாதாம்

நடிகர் அஜித்தின் ரசிகர்கள் துணிவு திரைப்படத்திற்கு பின் அவரது அடுத்த திரைப்படம் எப்போது திரைக்கு வரும் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.  ஆனால் அஜித் ரசிகர்களை பற்றி ஒன்றும் கவலைப்படாமல் ஜோலியாக ரேஸிங் வேலையை கவனித்து வருகிறார். இயக்குநர் மகிழ்திருமேனி […]

நடிகர் அஜித்தின் ரசிகர்கள் துணிவு திரைப்படத்திற்கு பின் அவரது அடுத்த திரைப்படம் எப்போது திரைக்கு வரும் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.  ஆனால் அஜித் ரசிகர்களை பற்றி ஒன்றும் கவலைப்படாமல் ஜோலியாக ரேஸிங் வேலையை கவனித்து வருகிறார்.

இயக்குநர் மகிழ்திருமேனி மற்றும் நடிகர் அஜித் கூட்டணியில் உருவாகிவரும் திரைப்படம் விடாமுயற்சி. லைகா புரொடக்சன் தயாரிக்கும் இத்திரைப்படத்தில், திரிஷா, அர்ஜூன், ரெஜினா காசாண்ட்ரா, ஆரவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

விடாமுயற்சி படத்தை ரிலீஸ் பண்ண தொடர்ந்து விடாமல் முயற்சி செய்து கொண்டிருக்கிறார் நடிகர் அஜித். ஆனால் தாமதம் ஆகிக்கொண்டே இருக்கிறது. இந்தப் படம் வரும் தீபாவளிக்கு திரைக்கு வரும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படப்பிடிப்பு தளத்தில் நடந்த சில குளறுபடிகளால் ரிலீஸ் தள்ளிப்போனது.

ரசிகர்களுக்கு ஆறுதல் பரிசு

இப்படி இருக்க, ரசிகர்களே படத்தின் மீதுள்ள ஆர்வம் குறைந்து, நொந்து போயிருக்கிறார்கள். அதனால் அஜித்துக்கே, அவர் ரசிகர்கள் மீது அனுதாபம் ஏற்பட்டு அவ்வப்போது, அவர்களை ஆறுதல் படுத்த, ஷூட்டிங்கில் இருக்கும் சில போட்டோக்களை மட்டும் பதிவிடுவார்.

இந்த நிலையில், தீபாவளிக்கு ரசிகர்களுக்கு ஆறுதல் பரிசு ஒன்று கொடுத்திருக்கிறார் நடிகர் அஜித். விடாமுயற்சி படத்தின் டீசரை தீபாவளிக்கு வெளியிடலாம் என படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.

நடிகர் அஜித்திற்கு வியாழக் கிழமை சென்டிமென்ட் வேலை செய்கிறது என்பதாலும், தீபாவளி பண்டிகையை கருத்தில் கொண்டும் வரும் அக்டோபர் 31ம் தேதி தீபாவளியன்று டீசர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இதிலும் குழப்பம் ஏற்பட்டால், ரசிகர்கள் வாழ்க்கையே வெறுத்துவிடுவார்கள். 

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.