புதன்கிழமை, ஜனவரி 22, 2025

ஒரே நாளில் கங்குவாவுடன் மோதும் விடாமுயற்சி.. இதுவரை இரு துருவங்களாக மோதிக்கொண்ட அஜித், சூர்யா

Vidamuyarchi vs kanguva: அஜித்தின் துணிவு படத்திற்கு மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் கமிட்டாகி இருந்தார். ஆனால் பல மாதங்களாக இழுத்தடித்துக் கொண்டிருந்த இப்படத்திற்கு தற்போது தான் விடிவுகாலம் பிறந்திருக்கிறது. அதாவது பிரச்சினைக்கு மேல் பிரச்சினையில் சிக்கி தவித்துக் கொண்டிருந்த விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் தேதியை குறித்து விட்டார்கள்.

போட்டி போட தயாராகிய அஜித் சூர்யா

ஆனால் இதிலும் ஒரு சிக்கல் என்று சொல்வதற்கு ஏற்ப சூர்யாவின் கங்குவா படம் அதே நாளில் ரிலீஸ் ஆகப்போகிறது. அதாவது சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா இரு தோற்றங்களில் நடித்திருக்கிறார். ஒன்று பீரியட் கால தோற்றத்தில் கையில் வாளோடு வெறித்தனமாக இருக்கிறார். மற்றொன்று இந்த காலத்திற்கு ஏற்றவாறு ஸ்டைலாக கையில் துப்பாக்கியுடன் களம் இறங்கி இருக்கிறார்.

இப்படம் 3d அனிமேஷனில் உருவாகி கிட்டத்தட்ட 10 மொழிகளுக்கு மேல் வெளியாக இருக்கிறது. அத்துடன் சூர்யா நடித்த படங்களிலேயே இப்படம் தான் அதிக பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. தற்போது இப்படத்துடன் அஜித்தின் விடாமுயற்சி படமும் மோத போகிறது.

அந்த வகையில் இரு படமும் தீபாவளி அன்று அனைத்து திரையரங்களிலும் ரிலீசாக போகிறது. ஏற்கனவே இவர்கள் இருவரும் இரு துருவங்களாக மோதிக்கொண்டு ஏற்று இறக்கங்களை சந்தித்திருக்கிறார்கள். அந்த வகையில் 2001 ஆம் ஆண்டு விஜய், சூர்யா நடிப்பில் வெளிவந்த பிரண்ட்ஸ் படத்துடன் அஜித் நடித்த தீனா படமும் வெளிவந்து மோதிக்கொண்டார்கள்.

இதில் இரண்டு படமும் ஒன்றுக்கொன்று சலச்சது இல்ல என்று சொல்வதற்கு ஏற்ப வெற்றி பெற்று இருக்கிறது. அதே மாதிரி 2003 ஆம் ஆண்டு விக்ரம் மற்றும் சூர்யா நடிப்பில் வெளிவந்த பிதாமகன் படத்துடன் அஜித் நடிப்பில் ஆஞ்சநேய படமும் வெளிவந்தது. ஆனால் இந்த படம் அஜித்துக்கு மிகப்பெரிய தோல்வியை கொடுத்து காலை வாரிவிட்டது.

இதனை தொடர்ந்து இருபது ஆண்டுகளுக்குப் பின் மறுபடியும் இருவரும் மோதிக்கொள்ளும் வகையில் கங்குவா உடன் விடாமுயற்சி மோத இருக்கிறது. அந்த வகையில் இருவர்களுக்கும் இருக்கும் ரசிகர்கள் அவர்களுடைய நடிகர்களை ஜெயிக்க வைக்கும் அளவிற்கு முட்டி மோதிக் கொள்ளப் போகிறார்கள். கடைசியில் எந்த படம் ஜெயிக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

கங்குவா விடாமுயற்சி படங்களின் அப்டேட்

Trending News