சினிமாவில் வந்த புதிதில் சிறு சிறு வேடங்களில் நடித்து அதன் பிறகு திருவண்ணாமலை படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமானவர் நடிகர் விதார்த். இவர் நடித்த மைனா படம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. இந்நிலையில் கம்மி பட்ஜெட்டில் முத்திரை பதித்த விதார்த்தின் 5 படங்களை தற்போது பார்க்கலாம்.
மைனா : பிரபுசாலமன் இயக்கத்தில் விதார்த், அமலாபால், தம்பி ராமையா ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் மைனா. இப்படத்தில் விதார்த்தின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. அதுமட்டுமல்லாமல் தம்பி ராமையாவுக்கு இப்படத்திற்காக தேசிய விருது கிடைத்தது.
குரங்கு பொம்மை : நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விதார்த், பாரதிராஜா ஆகியோர் நடிப்பில் 2017இல் வெளியான திரைப்படம் குரங்கு பொம்மை. இப்படத்தில் விதார்த் கதிர் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் இருந்த நேர்மையான விமர்சனங்கள் கிடைத்தது.
ஒரு கிடாயின் கருணை மனு : சுரேஷ் சங்கையா இயக்கத்தில் விதார்த், ரவீனா ரவி ஆகியோர் நடிப்பில் 2017 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஒரு கிடாயின் கருணை மனு. இப்படம் ஒரு ஆட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருந்தது. இப்படம் விமர்சன ரீதியாக பாராட்டுக்களை பெற்றது.
கொலைகாரன் : தமிழ்செல்வன் இயக்கத்தில் விதார்த், சஞ்சிதா ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம் கொலைகாரன். இப்படத்தில் குருவி என்ற கதாபாத்திரத்தில் விதார்த் நடித்திருந்தார். சிறு சிறு குற்றங்கள் செய்யும் மனிதனாக இப்படத்தில் விதார்த் நடித்திருந்தார்.
பயணங்கள் கவனிக்கவும் : எஸ்பி சக்திவேல் இயக்கத்தில் விதார்த், கருணாகரன், லட்சுமி பிரியா, சந்திரமௌலி நடிப்பில் வெளியான திரைப்படம் பயணங்கள் கவனிக்கவும். இப்படம் முழுக்க முழுக்க காமெடி படமாக எடுக்கப்பட்டு இருந்தது. இதில் எழில் என்ற கதாபாத்திரத்தில் விதார்த் நடித்திருந்தார்.