புதன்கிழமை, ஜனவரி 15, 2025

வெற்றிமாறன், விஜய் சேதுபதி இடையே நடக்கும் பனிப்போர்.. மாட்டிக்கொண்டு முழிக்கும் சிக்ஸ்பேக் ஹீரோ

வெற்றிமாறன் தற்போது காமெடி நடிகர் சூரியை ஹீரோவாக வைத்து விடுதலை என்ற திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி கௌரவ தோற்றத்தில் வருகிறார். படப்பிடிப்பு முக்கால்வாசி முடிந்துவிட்டது.

ஆனால் விஜய் சேதுபதி நடிக்கும் காட்சிகள் இன்னும் எடுத்து முடிக்கப்படவில்லை. அது மட்டுமல்லாமல் சில காட்சிகள் சரியாக இல்லாததால் அதை திரும்ப எடுக்கும் முயற்சியில் வெற்றி மாறன் இருக்கிறார். இந்நிலையில் விஜய் சேதுபதி கைவசம் ஏராளமான திரைப்படங்களை வைத்துக்கொண்டு பிஸியாக நடித்து வருகிறார்.

இதனால் அவராலும் படத்தை விரைவில் முடித்துக் கொடுக்க முடியவில்லை. இதனிடையே வெற்றிமாறனுக்கம், விஜய் சேதுபதிக்கும் இடையே ஏதோ பெரும் பிரச்சனை இருக்கிறது என்று சிலர் கூறுகின்றனர். அதை உறுதிப்படுத்தும் விதமாக சில சம்பவங்களும் நடந்துள்ளது.

அதாவது விஜய் சேதுபதி விடுதலை படத்துக்காக கொடுத்த கால்ஷீட்டை ஒதுக்கி வைத்துவிட்டு ஃபேமிலி மேன் வெப்சீரிஸ் இயக்குனர் இயக்கும் இரட்டையர் திரைப்படத்தில் நடிப்பதற்காக சென்றுவிட்டார். அதேபோன்று வெற்றிமாறனும் அடுத்த பட வேலைகளை கவனிக்க சென்று விட்டார்.

அவர் அடுத்ததாக சூர்யாவை வைத்து இயக்கவிருக்கும் வாடிவாசல் திரைப்படத்தின் பாடல் கம்போஸிங்கில் தற்போது இருக்கிறார். இதனால் விடுதலை திரைப்படத்தின் முடிக்கப்படாத காட்சிகள் எப்போது எடுத்து முடிக்கப்படும் என்று படக்குழுவினர் குழப்பத்தில் இருக்கின்றனர்.

இதிலிருந்து விடுதலை படத்தில் ஏதோ பிரச்சனை இருக்கிறது என்று திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கும் தற்போது அதிர்ச்சியாக இருக்கிறது.

Trending News