Viduthalai 2 Poster: சூரி முதல் முறையாக கதாநாயகனாக நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படம் தான் விடுதலை. வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் இளையராஜா இசையமைத்திருந்தார். இந்த படத்தின் பார்ட் 2 எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி உள்ள நிலையில் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டு இருக்கின்றனர். விடுதலை 2 போஸ்டரில் கதாநாயகன் சூரி இடம்பெறுவார் என எதிர்பார்த்த நிலையில் வெற்றிமாறன் ட்விஸ்ட் வைத்திருந்தார்.
ரத்தக் கரையுடன் விஜய் சேதுபதி
அதாவது உயிர்ப்ப உளரல்லர் என்று தொடங்கும் குறள் இந்த போஸ்டரில் இடம் பெற்றிருந்தது. அதோடு விஜய் சேதுபதி மற்றும் மஞ்சு வாரியர் இருவரும் இளமையான தோற்றத்தில் காதல் கலந்த காட்சி இடம் பெற்று இருக்கிறது.
மற்றொரு போஸ்டரில் கையில் கத்தியுடன் உடல் முழுவதும் விஜய் சேதுபதி ரத்தத்துடன் இருக்கும் போஸ்டரும் வெளியாகி இருக்கிறது. அதாவது விஜய் சேதுபதியின் பெருமாள் வாத்தியார் கதாபாத்திரத்தின் ஃப்ளாஷ் பேக் காட்சிகளாக விடுதலை 2 படம் அமைந்திருக்கிறது.
இளமையான தோற்றத்தில் விஜய் சேதுபதி, மஞ்சு வாரியார்
மேலும் 60களில் நடக்கும் இந்த காட்சியை எதார்த்தமாக காட்டுவதற்காக டிஏஜி தொழில்நுட்பத்தை வெற்றிமாறன் பயன்படுத்தி இருக்கிறார். விஜய் சேதுபதி மற்றும் சூரி இடையே ஆன சில காட்சிகள் இன்னும் படமாக்கப்பட உள்ளது. அதோடு இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா சிறப்பு தோற்றத்தில் வருவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
கம்பேக் கொடுத்த விஜய் சேதுபதி
- மகாராஜாவிற்கு பிறகு விஜய் சேதுபதி லெவலே வேற
- விஜய் சேதுபதியின் மகாராஜா OTT ரிலீஸ்
- மிஸ் பண்ணிடாதீங்க! அப்பவே மிரட்டி விட்ட விஜய் சேதுபதி, மிஸ்கின்