ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்த லைகா நிறுவனத்திற்கு இப்பொழுது போராத காலம் தலை விரித்து ஆடுகிறது. இதற்கு காரணம் அவர்கள் கையில் எடுக்கும் படங்கள் எல்லாம் பெரிய பட்ஜெட் கொண்டவை. சமீபத்தில் அப்படி எடுக்கப்பட்ட படங்கள் அனைத்துக்கும் அவர்களுக்கு பல பிரச்சனைகளை கொடுத்து வருகிறது.
இந்தியன் 2, வேட்டையன், என கமல், ரஜினி போன்ற உச்ச ஹீரோக்களை வைத்து பெரிய பட்ஜெட்டில் உருவாக்கிய படங்கள் அனைத்தும் அவர்களுக்கு நஷ்டத்தை கொடுத்தது. இதனால் சமீப காலமாகவே அவர்களுக்கு பணப்பரிவர்த்தனை கொஞ்சம் மோசமான நிலையில் தான் இருந்து வந்தது.
இப்படி இருக்கும் அவர்கள் அஜித்தின் விடாமுயற்சி படத்தை தயாரித்து வந்தார்கள். இதில் அவர்களுக்கு லாபமா- நஷ்டமா என்பதை குறிப்பது தான் இந்த செய்தி தொகுப்பு. கடந்த 2022 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த படம் 2025 பிப்ரவரி ஆறாம் தேதி ரிலீசானது. இந்த படத்தின் வெற்றியை பெரிதும் எதிர்பார்த்தது லைகா நிறுவனம்.
இந்த படத்தில் அஜித்துக்கு சம்பளமாக 105 கோடிகளும், திரிஷாவுக்கு 5 கோடிகளும் இயக்குனர் மகிழ்திருமேனிக்கு 5 கோடிகளும், படத்தில் வில்லனாக நடித்த அர்ஜுனுக்கு 7 கோடிகளும் கொடுக்கப்பட்டது. பப்ளிசிட்டி இதர செலவுகள் என இந்த படத்திற்காக மொத்தம் 280 கோடிகள் செலவழித்தது லைகா.
இவ்வளவு செலவு செய்து எடுக்கப்பட்ட விடாமுயற்சி படம் வெறும்137 கோடிகள் மட்டுமே உலக அளவில் வசூல் செய்தது. அஜித்துக்காக மட்டும் அவர்கள் 50 கோடி ரூபாய் நஷ்டப்பட்டு இருக்கிறார்கள். 3 வருடம் கழித்து ரிலீஸ் ஆனதால் அவர் சம்பளத்திற்கு வட்டி மட்டும் இவ்வளவு ஆகியுள்ளது. இந்த படத்தால் மீண்டும் லைகா நிறுவனம் அதல பாதாளத்துக்கு சென்றுள்ளது.