சினிமாவில் தற்பொழுது நடிகர்கள் வாங்கும் சம்பளம் தான் பேசும் பொருளாக உள்ளது. என்னதான் படத்தின் பட்ஜெட்டில் பாதிக்கும் மேல் செல்கிறது என கேள்விகள் எழுந்தாலும், அது அவர்களின் மார்க்கெட்டை பொருத்து அமைகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் – இயக்குனர் ஹெச்.வினோத் கூட்டணியில், போனி கபூர் தயாரிப்பில் 2வது படமான “வலிமை” அண்மையில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ஆனாலும் படம் சுமார் 200கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. இதே கூட்டணியில் தற்போது ஏகே 61 திரைப்படம், போனி கபூர் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்து வருகிறார்.
இதற்குள்ளாகவே, தற்போது அஜித்தின் அடுத்த படமான ஏகே 62 படத்தை குறித்து சமிபத்தில் லைகா நிறுவனம் அறிவித்தது. லைகா நிறுவனம் சார்பாக சுபாஸ்கரன் தயாரிக்கும் இந்த திரைப்படத்தை இளம் இயக்குநர்களில் ஒருவரான விக்னேஷ் சிவன் இயக்குவார் என அறிவிக்கப்பட்டது.
இந்த திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிக்க விக்னேஷ் சிவனின் காதலியும் முன்னணி நடிகையுமான நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அனிருத் இசையமைக்கிறார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் துவங்கப்பட்டு, அடுத்த ஆண்டு துவக்கத்தில் ரீலிசுக்கு வெளியாக திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போது பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாக இருக்கும் இந்த படத்தில் பணிபுரியும் அனைவரின் சம்பள பட்டியலும் வெளியாகியுள்ளன. இந்த திரைப்படத்தில் நடிக்க அஜித்திற்கு முந்தய திரைப்படமான ஏகே 61 ல் கொடுக்கப்படும் 100 கோடியை விடவும் 5கோடி அதிகமாக கொடுத்து லைகா 105கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. அதே போல் நடிகை நயன்தாராவிற்கு 10கோடி எனவும், அனிருத்துக்கு 5கோடி எனவும் சம்பளம் பேசப்பட்டுள்ளது.
தன்னுடைய திரைப்படமான “காத்து வாக்குல ரெண்டு காதல்” நிச்சயமாக வெற்றி பெறும் என நம்பும் விக்னேஷ் சிவன் தனக்கு சம்பளமாக 10 கோடி லைகா நிறுவனத்திடம் கேட்டு பெற்றுள்ளார். நயன்தாரா போல் தனக்கும் சம்பளத்தை உயர்த்தி கொடுங்கள் அல்லது சமமாக கொடுங்கள் என்பது போன்ற கோரிக்கை வைத்துள்ளார் விக்னேஷ் சிவன். எப்படியும் இந்த படத்திலும் வெற்றி பெற்றிட வேண்டும் என முனைப்பில் இயக்குனர் விக்னேஷ் சிவன் மும்முரமாக பணியாற்றி வருகிறார்.