Vignesh Shivan : கடந்த இரண்டு நாட்களாக இணையத்தில் அதிகம் ட்ரோல் செய்யப்பட்டு வரும் விஷயம் விக்னேஷ் சிவன் அரசு நிலத்தை விலைக்கு கேட்ட விஷயம்தான். போடா போடி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான விக்னேஷ் சிவன் இப்போது LIK என்ற படத்தை எடுத்து வருகிறார்.
இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்து வருகிறார். சமீபகாலமாக பல்வேறு சர்ச்சைகளில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் சிக்கி வருகிறார்கள். இந்நிலையில் சமீபத்தில் புதுச்சேரிக்கு விக்னேஷ் சிவன் சென்றிருந்தார்.
அங்கு அரசுக்கு சொந்தமான ஹோட்டலை விலைக்கு தருமாறு அந்த மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் இடம் கேட்டதாக கூறப்படுகிறது. மேலும் அரசு சொத்தை விலைக்கு தர முடியாது என அமைச்சர் மறுத்ததாக தகவல் வெளியானது.
அரசு ஹோட்டலை விலைக்கு கேட்டது குறித்து விளக்கம் கொடுத்த விக்னேஷ் சிவன்
இந்தச் செய்தி இணையத்தில் பூதாகரமாக வெடிக்க விக்னேஷ் சிவனை வறுத்தெடுக்கும்படி மீம்ஸ்கள் வர ஆரம்பித்தது. இதை அடுத்து இதற்கு விக்னேஷ் சிவன் விளக்கம் கொடுத்திருக்கிறார். அதாவது LIK படத்திற்காக லொகேஷன் பார்க்க புதுச்சேரி சென்றேன்.
மேலும் புதுச்சேரி விமான நிலையத்தில் படப்பிடிப்பு நடத்த அனுமதி வாங்க சென்றதாகவும், மரியாதை நிமித்தமாக புதுச்சேரி முதல்வர் மற்றும் சுற்றுலா துறை அமைச்சரை பார்க்க சென்றேன். அந்தச் சமயத்தில் தன்னுடன் வந்த மேனேஜர் ஹோட்டல் விலைக்கு வாங்குவது பற்றி பேசியதை தன்னுடன் ஒப்பிட்டு செய்திகள் வந்துவிட்டது.
மேலும் என்னை பற்றி வரும் ட்ரோல் மற்றும் மீம்ஸ்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது என்று விக்னேஷ் சிவன் கூறியிருக்கிறார். இப்போது விக்னேஷ் சிவன் கொடுத்து உள்ள இந்த விளக்கம் ஏற்புடையதாக இல்லை என்ற பலரும் கூறி வருகின்றனர்.