ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

யாரையும் மதிக்காத விக்னேஷ் சிவன்.. அப்படி அவங்க மேல என்னதான் கோபமோ தெரியல

எங்கள் வீட்டு விருந்திற்காக நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் வர வேண்டும் என விக்னேஷ் சிவனின் பெரியம்மா ஏக்கத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார். திருச்சி லால்குடியை பூர்வீகமாக கொண்ட விக்னேஷ் சிவன் தனது தந்தையின் அலுவலக வேலைக்காக சென்னைக்கு மாற்றம் செய்யப்பட்டு 1970ஆம் ஆண்டு முதல் சென்னையில் வசித்து வருகின்றனர்.

இதனிடையே தற்போது விக்னேஷ் சிவன், தமிழின் முன்னணி பாடலாசிரியராகவும் ,இயக்குனராகவும் வலம் வந்து தற்போது நடிகை நயன்தாராவின் கணவராகவும் ஆகிவிட்டார். மேலும் நேற்று நடைபெற்ற இவர்களது திருமணம் இன்னும் இணையத்தில் ட்ரெண்டிங்காக பேசப்பட்டது வருகிறது.

அந்த அளவிற்கு பிரமாண்டமாக நாயன்தராவின் சிகப்பு வண்ண புடவை, அவர் அணிந்திருந்த வைர ஆபரணம், விக்னேஷ் சிவன் உடுத்திய பட்டுவேஷ்டி சட்டை என ராஜா ராணிபோல் அவர்களின் திருமணம் நடைபெற்றது. மேலும் ஒரு லட்சம் பேருக்கு கல்யாணா விருந்து, 100க்கும் மேற்பட்ட திரைப்பிரபலங்களின் வருகை என கொண்டாட்டமாக அமைந்தது.

இந்நிலையில் இவ்வளவு ஆடம்பரமாக நடந்த திருமண விழாவில்,திருச்சி லால்குடியில் உள்ள தனது பெரியம்மா மற்றும் பெரியப்பாவிற்கு திருமண பத்திரிக்கை கூட வைக்காமல் உள்ளார் விக்னேஷ் சிவன். இதனிடையே தங்களையும் தங்கள் உறவுகளையும் அழைக்காமல் விக்னேஷ் சிவன்,நயன்தாரா திருமணம் நடந்தது வேதனை அளிப்பதாக அவரது பெரியம்மா தெரிவித்துள்ளார்.

மேலும் அவர்களது திருமணத்திற்கு முன்பு குலதெய்வ கோவிலில் சென்று பொங்கல் வைக்குமாறு தான் சொன்னதாகவும், ஆனால் என்னிடம் கூட தெரிவிக்காமல் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் பொங்கல் வைத்து விட்டு சென்றனர். ஆனால் திருமணத்திற்கு பத்திரிக்கை வைத்து அழைப்பார்கள் என்று நினைத்திருந்த நிலையில் அது கூட செய்யாமல் விட்டார் விக்னேஷ் சிவன். மேலும் எங்கள் மீது அப்படி என்ன கோபமோ தெரியவில்லை என்றும் விக்னேஷ் சிவனின் பெரியம்மா வேதனையுடன் தெரிவித்தார்.

மேலும் நயன்தாரா மற்றும் விக்னேஸ்வரனின் தம்பதிக்கு நாங்கள் விருந்து வைக்க தயாராக இருப்பதாகவும், எங்களது வீட்டு வாசல் கதவினை அவர்கள் இருவருக்காகவும் எப்போதுமே திறந்து வைத்திருந்து காத்திருப்போம். மேலும் அவர்கள் இருவரும் விருந்திற்கு வந்தால் நாங்கள் சந்தோஷமாக இருப்போம் என கேட்டுக்கொண்டுள்ளார் .

Trending News