வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

விக்னேஷ் சிவனிடம் இருந்து கைநழுவி போன AK-62.. அஜித்தின் ஹிட் பட இயக்குனருக்கு வாய்ப்பு தரும் லைக்கா

அஜித்தின் துணிவு படத்தின் வெற்றியை தொடர்ந்து அவரின் அடுத்த படமான Ak-62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக அறிவிப்பு வெளிவந்தது. இதில் ஐஸ்வர்யா ராய், சந்தானம், அரவிந்த்சாமி மற்றும் பலர் நடிக்கப் போவதாக அறிவிப்புகள் வந்து கொண்டிருந்தன. இந்நிலையில் இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்புகள் அதிகமாய் இருந்து வந்தன.

இதற்கான படப்பிடிப்பு ஜனவரி மாதமே தொடங்க வேண்டியது. ஆனால் இந்த படப்பிடிப்பு தள்ளிக்போய்க் கொண்டிருக்கிறது. இந்த படத்தை இன்னும் ஆரம்பிக்க கூட இல்லை. இந்நிலையில் தயாரிப்பாளருக்கு என்ன செய்வதென்று தெரியாமல் அதிரடியாக ஒரு முடிவை எடுத்து விட்டதாக கூறப்படுகிறது.

Also read: அட்லீ, ஏஆர் ரகுமானுடன் கூட்டணி போடுவது உறுதியா? அஜித் தரப்பில் இருந்து வெளிவந்த ஏகே 63 அப்டேட்

அனைத்து விஷயத்திலும் தாமதப்படுத்தி வந்த விக்னேஷ் சிவனிடம் எப்போது படபிடிப்பு தொடங்கலாம் என கேட்டதற்கு என்ன சொல்வது என்று தெரியாமல் முழித்திருக்கிறார். இப்பொழுது அவர் திரைக்கதையிலும் தாமதப்படுத்தி வருகிறார். இந்நிலையில் விஜயின் தளபதி 67 படப்பிடிப்பு தொடங்கிவிட்டது.

இதனால் பொறுத்து பார்த்த லைக்கா விஜய் படத்திற்கு நிகராக அஜித் படத்தை எடுக்க விக்னேஷ் சிவன் சரியானவர் இல்லை என்று முடிவு எடுத்து விட்டது. அதனால் தற்பொழுது அஜித்திற்காகவே பல வருடம் காத்திருக்கும் விஷ்ணுவர்தன் இயக்குனருக்கு லைக்கா வாய்ப்பு கொடுக்க முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளன.

Also read: விக்னேஷ் சிவன் திருமணத்தில் வெளியான புகைப்படங்கள்.. அழகில் ஜொலிக்கும் நயன்தாரா

ஏற்கனவே விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் நடித்து பில்லா 2 என்ற படத்தில் பெரிய அளவில் வெற்றி பெற்று மெகா ஹிட் ஆக அமைந்தது. இதனை தொடர்ந்து ஏகே 62 படத்தை விஷ்ணுவர்தன் இயக்க ஆரம்பித்தால் அது வெற்றி படமாக தான் அமையும் என்று பேசப்பட்டு வருகிறது. இதனால்தான் லைக்கா சரியான நேரத்தில் நல்ல முடிவை எடுத்துள்ளதாக அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

மேலும் இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனால் விக்னேஷ் சிவனின் செயல்கள் உண்மையாகவே அப்படித்தான் இருக்கிறது. இவருக்கு கிடைத்த வாய்ப்பினை ஒழுங்காக பயன்படுத்தாமல் இவரின் அலட்சியத்தால் கை நழுவ விட்டுட்டார் என்று இவரை கிண்டல் செய்யும் அளவிற்கு ரசிகர்கள் பேசி வருகின்றனர்.

Also read: துணிவு படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் ரிப்போர்ட்.. ஆட்டநாயகன் என நிரூபித்த அஜித்

Trending News