Vignesh Shivan: வேலியில் போற ஓணானை தூக்கி மேல விட்டு கிட்ட மாதிரி என்று ஒரு பழமொழி சொல்லுவாங்க. அப்படித்தான் ஆகிவிட்டது நயன்தாராவின் நிலைமை.
எந்த நேரத்தில் தனுஷ் பற்றி வாய் திறந்தாரோ அதிலிருந்து அவர் மீது நெகட்டிவ் விமர்சனங்கள் அதிகம் ஆகிவிட்டது.
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்தான் எல்லாம் சௌக்கியமாக இருக்கும் என்பது உண்மைதான் போல.
தன்னை வெளியில் அதிகம் தெரியப்படுத்திக் கொள்ளாத வரைக்கும் நயன்தாராவுக்கு இருந்த மரியாதை வேறு.
எப்போது பொதுவெளியில் களம் கண்டாரோ அப்போதே அவர் மீது கருப்பு சாயம் பூசும் விமர்சனங்களும் வர ஆரம்பித்தது.
அவர் மீது வந்தால் மட்டும் இல்லை அவருடைய காதல் கணவரையும் சுழற்றி அடித்துக் கொண்டு இருக்கிறது.
நடிகை சோனா
சமீபத்தில் வலைப்பேச்சு சேனலை சேர்ந்தவர்களை தரம் குறைந்த விமர்சனத்தால் பேசி இருந்தார் நயன்தாரா.
அவர்கள் நயன்தாராவை விட்டுவிட்டு சும்மா இருந்த விக்னேஷ் சிவனை புஷ்பா புருஷன் என்று பேச ஆரம்பித்தார்கள்.
போதாத குறைக்கு இப்போது ஒரு பெரிய குண்டை தூக்கி போட்டு இருக்கிறார்கள்.
அதாவது போடா போடி படம் முடிந்த பிறகு விக்னேஷ் சிவன் என்ன செய்து கொண்டு இருந்தார் என தெரியுமா என ஆரம்பித்திருக்கிறார்கள்.
அதாவது விக்கி சினிமாவில் பெரிய அளவில் ஜெயிப்பதற்கு முன்னாடி வரைக்கும் கவர்ச்சி நடிகை சோனா வீட்டில் தங்கி இருந்தாராம்.
அங்கு அவருக்கு தேவையான எல்லா வேலைகளையும் செய்து கொடுத்து கொண்டு இருந்தார் என இரட்டை அர்த்தத்தோடு பேசி இருக்கிறார் வலைப்பேச்சு சேனல் பிஸ்மி.
குசேலன் படத்தில் வடிவேலுவின் மனைவியாக நடித்தவர் தான் நடிகை சோனா.
இந்த சோனாவிடம் பேட்டி எடுத்தாலே அவர் விக்னேஷ் சிவனை பற்றி கதை கதையாக சொல்வார் என்று வேறு துருப்பு சீட்டை போட்டு இருக்கிறார் பிஸ்மி.
கால சுத்தின பாம்பு ஆளை விடாது என்ற கதையா தேவையில்லாமல் வாயை திறந்து நயன்தாரா வலைப்பேச்சு சேனல் காரர்களிடம் மாட்டிக் கொண்டார் என்று தான் சொல்ல வேண்டும்.