Vignesh Shivan: பட்ட காலிலேயே படும் கெட்ட குடியே கெடும் என பழமொழி சொல்வார்கள். அது இப்போது விக்னேஷ் சிவனுக்கு தான் சரியாக பொருந்தி இருக்கிறது. சமீப காலமாகவே நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் சம்பந்தப்பட்ட செய்திகள் தான் சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாக பரவிக் கொண்டிருக்கிறது. ஏதாவது ஒரு வழியில் முன்னேறி விடலாம் என இந்த தம்பதி போராடிக் கொண்டிருந்தால் இருவருக்கும் அடிமேல் அடி தான் விழுந்து கொண்டிருக்கிறது.
ஏற்கனவே அஜித்துடன் படம் ஒப்பந்தமாகி பின்னர் விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டதிலிருந்து, அவருடைய சினிமா கேரியர் பெரிய அளவில் சந்தேகத்திற்கு உள்ளாகி இருக்கிறது. இதற்கிடையில் தான் பிரதீப் ரங்கநாதன் மற்றும் விக்னேஷ் சிவன் கூட்டணி உருவாகப் போகும் படத்தை உலகநாயகன் கமலஹாசன் தன்னுடைய ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்க இருப்பதாக செய்திகள் வெளியானது.
விக்னேஷ் சிவன் ஒரு வருட காலமாக பட்ட கஷ்டத்திற்கெல்லாம் கை மேல் பலனாக கமலுடன் கூட்டணி வைத்து விட்டார் என கோலிவுட் வட்டாரம் சிலாகித்து வந்தது. ஆனால் அந்த சந்தோஷம் கொஞ்ச நாள் கூட நீடிக்க வில்லை. பட்ஜெட் பிரச்சனை காரணமாக கமல் இந்த படத்தை தயாரிப்பதில் இருந்து விலகிக் கொண்டார். இது விக்னேஷ் சிவனுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்துவிட்டது.
Also Read:ஹெச் வினோத்தை அசிங்கப்படுத்திய 3 ஹீரோக்கள்.. கடுப்பாகி, வேற பிளான் போட்ட சம்பவம்!
கமல் கிரேட் எஸ்கேப்
எல் ஐ சி என தலைப்பிடப்பட்ட இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க முன்வந்து, படத்தின் பூஜை வேலைகளும் சிறப்பாக நடைபெற்றது. படத்திற்கு மிகப்பெரிய பலமாக எஸ் ஜே சூர்யா இணைந்தார். ஆனால் யார் கண் பட்டதோ தெரியவில்லை ஒரு பக்கம் படத்தின் டைட்டிலை நான் ஏற்கனவே பதிவு செய்து விட்டேன் என்று சொல்லி இயக்குனர் குமரன் பிரச்சனை பண்ண, டைட்டில் யாருக்குமே சொந்தம் கிடையாது என்று எல்ஐசி நிறுவனம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.
இது போதாது என படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க இருந்த நயன்தாரா சம்பளப் பிரச்சனை காரணமாக படத்தை விட்டு விலகி இருக்கிறார். கணவரின் படத்தில் நடிப்பதற்கு நயன்தாரா சம்பள விஷயத்தில் கறாராக இருக்கிறாரா என எல்லோருக்குமே மிகப்பெரிய கேள்வி எழுந்தது. இவ்வளவு சிக்கல்களையும் தாங்கிக் கொண்டிருக்கும் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தான் தற்போது விழி பிதுங்கி என்ன செய்வது என யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.
படம் ஆரம்பிப்பதற்கு முன்பே இத்தனை சிக்கல்கள் வந்தால் அதன் மீது இருந்த நம்பிக்கை தயாரிப்பாளர்களுக்கு கண்டிப்பாக குறைந்து விடும். பிள்ளையார் சுழி போடுவதற்கு முன்பே சம்பளத்தை கறாராக பேசி முடித்து விக்னேஷ் சிவனுக்கு 5 கோடி, பிரதீப் பிரதீப் ரங்கநாதன்க்கு 8 கோடி, அனிருத்துக்கு 10 கோடி, எஸ் ஜே சூர்யா வுக்கு 10 கோடி என அவர்களது கணக்கை மட்டுமே 30 கோடிக்கு மேல் இழுத்து வைத்திருப்பதால் இப்போது பயங்கர சிக்கலில் மாட்டியிருக்கிறது செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம்.
Also Read:லோகேஷ், அனிருத்துக்கு வலை விரிக்கும் நடிகர்.. தும்பை விட்டு வாலை பிடிக்கும் சாக்லேட் பாய்