தமிழ் சினிமாவில் ஒரு சில அவல நிலைகள் தற்போது வரை தலைதூக்கி வருகிறது. ஒரு படத்தை கடைசிவரை இழுத்தடித்துக் கொண்டே இருக்கின்றனர். இதனால் ஏகப்பட்ட விமர்சனமும் அந்தப்படத்தை பார்த்தபின் எழுவதுண்டு.
அது சரி இல்லை, இது சரி என்று கடைசி நேரம் வரை அந்த படத்திற்கு ஏதாவது பிரச்சனை ஏற்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றனர். குறிப்பாக இப்பொழுது விக்னேஷ் சிவன் எடுத்த காற்றுவாக்கில் ரெண்டு காதல் படம் பல பிரச்சனைகளை சந்தித்தது.
ஏனென்றால் படம் ரிலீஸ் ஆவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே சென்சாருக்காக படத்தை அனுப்பிவிட வேண்டும். ஆனால் காற்றுவாக்கில் ரெண்டு காதல் படத்தின் கால தாமதத்தால் தமிழகத்தில் மட்டுமே ரிலீஸ் செய்யப்பட்டு, வெளிநாடுகளில் ரிலீஸ் செய்ய முடியாத நிலை ஏற்பட்டு விட்டது.
இதனால் காற்றுவாக்கில் ரெண்டு காதல் படத்தின் வியாபாரத்தை பல கோடிகள் நஷ்டம் ஏற்பட்டுவிட்டது. இதற்கெல்லாம் அனிருத் தான் என முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.
ஏனென்றால் அவர்கள் கடைசி வரை பாட்டில் பல்வேறு மாற்றத்தை செய்துகொண்டு குறித்த நேரத்திற்குள் கொடுக்காமல் இழுத்தடித்திருக்கிறார். அத்துடன் கடைசிவரை படத்தின் எடிட்டிங் வேலை நடைபெற்றது.
இந்தப்படத்தின் பாட்டுகள் ஹிட்டானதால் அதை வைத்தே இந்தப் படத்தை இன்னும் கொஞ்சம் நன்றாக எடுத்திருந்து படத்தை பிசினஸ் ஆக்குவதில் விக்னேஷ் சிவன் கூடுதலாக முயற்சி செய்திருக்கலாம். கடைசியில் படம் பிளாப் ஆனது தான் மிச்சம்.