வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

இரண்டாவது ஹனிமூன்னா?. விக்னேஷ் சிவன் போன கதையே வேற ஜி

நட்சத்திர ஜோடிகளான நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் அண்மையில் பார்சிலோனாவிற்க சென்றுள்ளனர். இவர்கள் எடுக்கும் நெருக்கமான புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். மேலும் 75வது சுதந்திர தினத்தையும் அங்கு கொண்டாடி இருந்தனர்.

இந்நிலையில் நயன்தாராவே ஆச்சரியப்படும் அளவிற்கு சர்ப்ரைஸ் கொடுத்த விக்னேஷ் சிவன் திக்குமுக்காடச் செய்து உள்ளார். அதாவது நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் தங்களது பட வேலையில் பிரேக் எடுத்து இரண்டாவது முறையாக ஹனிமூன் சென்று உள்ளார்கள் என்று கூறப்படுகிறது.

ஆனால் இவர்கள் அங்கு ஹனிமூன் செல்லவில்லையாம். அதாவது விக்னேஷ் சிவன் அடுத்ததாக அஜித்தின் 62 வது படத்தை இயக்கயுள்ளார். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நயன்தாராவும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. தற்போது இந்த படத்தின் லொக்கேஷன் பார்க்க தான் போயுள்ளனர்.

மேலும் இப்படத்திற்காக அதிநவீன பைக் ஒன்றையும் தேடிக் கொண்டிருக்கிறார்களாம். ஏற்கனவே அஜீத் நடிப்பில் வெளியான வலிமை படத்தில் ஏகப்பட்ட பைக் ஸ்டன்ட் காட்சிகள் வைக்கப்பட்டிருந்தது. அதேபோல் ஏகே 62 படத்திலும் நிறைய பைக் சீன்கள் இருக்கிறதாம்.

மேலும் ஜனவரி 1 இல் இருந்து இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாம். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். அஜித் தற்போது வினோத் இயக்கத்தில் ஏகே 61 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் விக்னேஷ் சிவன் படத்தில் அஜித் இணைய உள்ளார்.

இந்நிலையில் படு பிசியாக இருக்கும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பது போல ஏகே 62 படத்திற்காக லொக்கேஷன் பார்க்க வந்த இடத்தில் இரண்டாவது முறையாக ஹனிமூன் கொண்டாடி உள்ளனர் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Trending News