திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

எப்படியோ ஒரு வருடத்தை கழித்த விக்கி-நயன் ஜோடி.. இணையத்தில் ட்ரெண்டாகும் ட்வின்ஸ் ஃபோட்டோஸ்

Nayanthara Vignesh Shivan : லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கடந்த வருடம் ஜூன் 9 ஆம் தேதி தனது இயக்குனர் விக்னேஷ் சிவனை கரம் பிடித்தார். மிகப்பிரம்மாண்டமாக இவர்களது திருமணம் மகாபலிபுரத்தில் நடந்தது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் வரை பல நட்சத்திரங்கள் நயன்தாரா திருமணத்தில் கலந்து கொண்டனர்.

அந்த சமயத்தில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் நீண்ட காலம் சேர்ந்து வாழ மாட்டார்கள், சில மாதங்களிலேயே இவர்களுக்குள் பிரிவு ஏற்படும் என விமர்சனங்கள் எழுந்தது. ஏனென்றால் சமந்தாவை போல் நயன்தாராவுக்கு திருமணம் எல்லாம் செட் ஆகாது என கூறப்பட்டது.

Also Read : பிகில் படம் போல அடுத்த ஸ்போர்ட்ஸ் கதையுடன் ரெடியான விக்னேஷ் சிவன்.. கூட்டு சேரும் நயன்தாரா

இந்நிலையில் இன்று நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் எப்படியோ தங்களது ஒரு வருட திருமண நாளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளனர். இந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டா பக்கத்தில் நயன்தாரா மற்றும் அவருடைய இரட்டை குழந்தைகளின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அதாவது திருமணமான இரண்டு மாதங்களிலேயே நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் வாடகை தாய் மூலம் இரட்டைக் குழந்தைகள் பெற்றெடுத்தனர். விசேஷ நாட்களில் விக்னேஷ் சிவன் நயன்தாரா மற்றும் குழந்தைகளின் புகைப்படங்களை சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருந்தார்.

Also Read : திரிஷாவுக்கு பின் வந்து காணாமல் போன 6 நடிகைகள்.. 40 வயதிலும் நயன்தாராவை ஓரங்கட்டிய குந்தவை

ட்வின்ஸ் குழந்தைகளின் முகம் தெரியும்படி நயன்தாரா உடன் இருக்கும் புகைப்படங்களை விக்னேஷ் சிவன் வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படங்கள் இப்போது இணையம் முழுக்க பரவி ட்ரெண்ட் ஆகி வருகிறது. இதைப் பார்த்த சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் நயன்தாரா, விக்னேஷ் சிவனுக்கு திருமண வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள்.

அம்மாவாக மாறிய நயன்தாரா

nayanthara-cinemapettai
nayanthara-cinemapettai

நயன்தாரா சினிமா மற்றும் சொந்த வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்தித்த நிலையில், மனம் தளராமல் தனது முன்னேற்றத்திற்காக கடுமையாக உழைத்து அதற்கான வெற்றியை பெற்றிருக்கிறார். மேலும் சரியான வாழ்க்கைத் துணையையும் தேர்ந்தெடுத்துள்ளார். இப்போது விக்னேஷ் சிவன் நயன்தாரா இருவரும் தங்களது சினிமா கேரியரில் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார்கள்.

முதல் வருட திருமண நாளை கொண்டாடும் விக்கி, நயன்

nayanthara
nayanthara

இரட்டை குழந்தைகளுடன் நயன்தாரா

nayanthara-twins-baby
nayanthara-twins-baby

Also Read : ரவுண்டு கட்டி அடி வாங்கும் இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன்.. நயன்தாரா விட்ட சாபம் தான் போல

Trending News