திங்கட்கிழமை, ஜனவரி 20, 2025

தனுசை ஜெயித்தே ஆகவேண்டும்.. நுங்கை பிதுக்கி எடுக்கும் விக்னேஷ் சிவன்

தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் பாலிவுட்டிலும் கொடிகட்டி பறக்கும் தனுஷ், மற்ற நடிகர்களுக்கு மட்டுமல்லாமல் இயக்குனர்களுக்கும் போட்டியாக மாறி வருகிறார். அவருடைய பாடல்களும் படங்களும் பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடிக்கிறது.

இவருக்கு போட்டியாக தற்போது காதல், நகைச்சுவை போன்றவற்றை தன்னுடைய படத்தில் தூக்கலாக காண்பித்து நடிகர், பாடலாசிரியர் தற்போது இயக்குனராகவும் மட்டுமல்லாமல் நயன்தாராவின் காதலனாகவும் வலம் வருபவர் விக்னேஷ் சிவன். இவர் தற்போது எடுத்து முடித்திருக்கும் படம் காத்துவாக்குல 2 காதல்.

இந்தப்படத்தின் பூசணிக்காய் எல்லாம் உடைத்து முடித்துவிட்டு படம் ரிலீசுக்கு காத்திருக்கும் நிலையில் கூட, அந்தப் படத்தை விக்னேஷ் சிவன் விட்டபாடில்லை. ஏனெனில் இந்தப் படத்தை மீண்டும் மீண்டும் ரீ ஷூட் செய்துகொண்டிருக்கிறார். இதற்கு என்ன காரணம் என்றால் அந்த படத்தில் இருக்கும் ‘டு டு டு’ என்ற பாடல் செம ஹிட் அடித்துள்ளது.

ஆகையால் இந்தப் படத்தை எப்படியாவது ரசிகர்கள் விரும்பும் படி எடுக்க வேண்டும் என்பதற்காக கடந்த வாரம் சமந்தா, நயன்தாரா, விஜய் சேதுபதி மூவரையும் வைத்து விக்னேஷ் சிவன் நுங்கை பிதுக்கி விட்டாராம். ஏற்கனவே தனுஷின் கொலைவெறி பாட்டு செம ஹிட்டடித்து சக்கை போடு போட்டது.

அதுமட்டுமின்றி இந்தப்பாடல் வெளிநாடுகளிலும் பயங்கர ஹிட் அடித்தது. இந்தப் பாட்டின் ரெக்கார்டை முறியடிக்க வேண்டும் என்பதற்காகவே விக்னேஷ் சிவன் படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறார். எனவே அவருடைய முயற்சி செல்லுபடி ஆகுமா என்பது படம் ரிலீஸ் ஆனால் மட்டுமே தெரியும்.

ஏற்கனவே நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் திருமணம் கூடிய விரைவில் நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில் இந்த படத்தின் எதிர்பார்ப்பு இன்னும் சுவாரஸ்யத்தை கிளப்பியுள்ளது. சினிமாவில் ஆரோக்கியமான போட்டிகள் தேவை தான் அதுவே எதிர்வினையாக மாறிவிடக்கூடாது.

Trending News