Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

நயன்தாரா விசயத்தில் காரியக்காரனாக இருக்கும் விக்னேஷ் சிவன்.. இப்பவே போடும் கிடுக்கிப்பிடி

நயன்தாரா விசயத்தில் காரியக்காரனாக இருக்கும் விக்னேஷ் சிவன்.. இப்பவே போடும் கிடுக்கிப்பிடி

நானும் ரவுடி தான் படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் சேதுபதி, நயன்தாரா இருவரும் இரண்டாவது முறையாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் படம் உருவாகியுள்ளதால் ரசிகர்களுக்கு படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்தப்படத்தில் […]

நானும் ரவுடி தான் படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் சேதுபதி, நயன்தாரா இருவரும் இரண்டாவது முறையாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் படம் உருவாகியுள்ளதால் ரசிகர்களுக்கு படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்தப்படத்தில் சமந்தாவும் இணைந்துள்ளதால் படம் வேற லெவலில் இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர் ரசிகர்கள்.

கடந்த 14ஆம் தேதி இந்த படத்தில் இருந்து” டூடூடூ” பாடலின் ப்ரோமோ வெளியாகியது. விஜய் சேதுபதி, சமந்தா, நயன்தாரா என மூவரும் இணைந்து நடனமாடியுள்ள இந்த பாடல் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. தற்போது இந்த பாடலிலுள்ள விக்னேஷ் சிவனின் ஒரு தந்திரத்தை நெட்டிசன்கள் கண்டுப்பிடித்துள்ளனர்.

விஜய் சேதுபதியுடன் இளமை துள்ளலான இந்த பாடலில் சமந்தா ஒரு புறமும், நயன்தாரா மற்றொரு புறமும் நடனமாடியுள்ளனர். இருப்பினும் இந்த பாடலில் விக்னேஷ் சிவன் தனது காதலிக்கு புடவை அணிவித்து மறுபுறம் சமந்தாவிற்கு கிளாமராக உடை வழங்கியுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் ஏன் இப்படி விக்னேஷ்? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

முதலில் கிளாமிர் ஹீரோயினாக இருந்த நயன்தாரா, ராஜா ராணி படத்திற்கு பின் அவ்வாறு நடிப்பதை முற்றிலும் கைவிட்டுள்ளார். பின்னர் விக்னேஷ் சிவனுடன் காதல் என்று ஆன பிறகு முழுமையாக கதை நாயகியாக மட்டுமே நடித்து வருகிறார். இடையில் ரஜினி, அஜித், விஜயுடன் படம் நடித்திருந்தாலும் அனைத்திலும் கிளாமராக கொஞ்சம் கூட தோன்றவில்லை. அதே போல் இந்த படத்திலும் விக்னேஷ் சிவன் நயன்தாராவுக்கு அவ்வாறான காட்சி ஒன்று கூட வைக்கவில்லை.

முன்னணி நடிகைகள் இரண்டு பேர் பெரும்பாலும் இணைந்து நடிக்க மாட்டார்கள். ஒருவருக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து மற்றொருவருக்கு அவ்வாறு இருக்காது என்பதாலேயே இது திரையுலகில் நீடித்து வந்தது. இந்த நிலையில், எந்த ஒரு ஈகோவும் இன்றி நயன்தாராவும், சமந்தாவும் இந்த படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர்.

வருகிற ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாக உள்ள இந்த படத்தின் ப்ரமோஷன் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அனிரூத் இசையமைத்துள்ள பாடல்கள் அனைத்தும் வெளியாகி ஹிட் அடித்துள்ளன. இந்த படத்தை 7 ஸ்கிரீனுடன் இணைந்து விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் ரௌடி பிக்சர்ஸ் சார்பில் தயாரித்துள்ளனர்.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.