வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

AK 62 படத்தின் இயக்குனர் இவர்தானாம்.. அப்போ அஜித்திற்கு ஹீரோயினும் ரெடின்னு சொல்லுங்க

சமீபத்தில் ஹெச் வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிப்பில் வெளியான படம் வலிமை. இப்படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் வந்தாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. வலிமை படத்தை தொடர்ந்து AK61 படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்க உள்ளது.

AK61 படத்தில் வினோத், போனிகபூர், அஜித் என வலிமை கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இப்படத்தில் அதிதி ராவ் ஹைதாரி, கவின், யோகிபாபு, பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் நடிக்க உள்ளனர். இப்படத்திற்காக ஹைதராபாத்தில் மிகப்பெரிய செட் போடும் வேலை நடந்து வருகிறது.

இந்நிலையில் அஜித்தின் அடுத்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அஜித்துக்காக விக்னேஷ் சிவன் ஒரு கதை எழுதி உள்ளதாகவும் அதற்கு அஜித் ஓகே சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் அஜித்தின் AK 62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார்.

இப்படத்தை லைகா புரடக்ஷன் தயாரிப்பதாகவும், அனிருத் இசையமைத்ததாகவும் கூறப்படுகிறது. இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நயன்தாரா தன்னுடைய காதலன் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தற்போது காத்துவாக்குல 2 காதல் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இப்படத்தில் நயன்தாராவுடன் விஜய் சேதுபதி மற்றும் சமந்தா இருவரும் நடித்துள்ளனர். இப்படம் ஏப்ரல் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் மீண்டும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா நடிக்க உள்ளார். அஜித்துடன் பில்லா, ஏகன், ஆரம்பம், விசுவாசம் ஆகிய படங்களில் நயன்தாரா நடித்துள்ளார்.

இந்நிலையில் AK 62 படத்தில் அஜித்துடன் மீண்டும் இணைய உள்ளார் நயன்தாரா. ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித் AK 61 படத்தை முடித்த கையோடு விக்னேஷ் சிவன் உடன் அடுத்த படத்தில் நடிக்க உள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வரும் என எதிர்பார்க்கலாம்.

Trending News