செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

விஜய் 68 இல் நாலஞ்சு எக்ஸ்ட்ரா பிட்டுகளை சேர்த்து போட்ட விஜய்.. வசமாக சிக்கி கொண்ட வெங்கட் பிரபு

Vijay 68 update: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வரும் விஜய், லியோவின் வெற்றிக்கு பின் ஆக்சன் படங்களுக்கு ஓய்வு கொடுத்து ஜாலியாக ஒரு படம் பண்ண வேண்டும் என்று வெங்கட் பிரபுவிடம் கோரிக்கை வைக்க வித்யாசமான ஸ்டைலில் சயின்ஸ் பிக்சன் டைம் ட்ராவல் காமெடி என அனைத்தையும் கலந்து ஒரு மசாலாவாக விஜய் 68 உருவாக்கி வருகிறார் வெங்கட் பிரபு.

வெங்கட் பிரபு படம் என்றாலே கல்யாண கூட்டமாக வாடிக்கையான பல முன்னணி நடிகர்கள், கலைஞர்கள் என ஆட்டம் படு பயங்கரமான குஷியாக இருக்கும். இதில் ஆஸ்தான இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா வேறு. இசையிலும் தெறிக்க விடுவது இக்குடும்பத்தின்  வழக்கம்.

இப்போது பிரச்சனை என்னவென்றால் இந்த கலகல! கசகசா! நம்ம தளபதிக்கு எரிச்சலை கிளப்பி உள்ளது. எதிலும் சைலண்டை கட்டி காத்து வரும் நம்ம தளபதி, வெங்கட் பிரபுவிடம் டயலாக் முதல் எல்லாத்தையும் சேஞ்ச் பண்ணுங்க என்று கட்டளை இட்டுள்ளாராம்.

Also Read: தளபதி-68 படத்தில் விஜய்க்கு இருக்கும் ஏகப்பட்ட பிளஸ்கள்.. எல்லாருமே அந்த ஒரு சீனுக்காக தான் வெயிட்டிங்

எல்லாத்தையும் ஜாலியாக எடுத்துக் கொள்ளும் வெங்கட்பிரபுவோ, விஜய் சும்மா பிராங்க் பண்ணுகிறார் என்று நினைத்து எதையும் மாற்றாமல் அப்படியே வைக்க!  இறுதியாக கோபத்தில் கொந்தளித்து விட்டார் விஜய். நீங்க எப்படி வேணாலும் ஜாலியா இருங்க ஆனால் சூட்டிங் இப்படி இருந்தால் சரி வராது பாத்துக்கோங்க ன்னு தடால் அடியாக சொல்லிவிட்டாராம். இதைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்தார் வெங்கட் பிரபு.

திரையில் ஜாலியாக இருக்கும் விஜய் படப்பிடிப்பின் போது மிகவும் சைலன்டாக இருப்பதுடன் மற்ற நடிகர்களும் தேவை இல்லாமல் அவருடன் பேசுவதை  தவித்து விடுவாராம் இதை வாரிசு படத்தில் நடித்த நடிகை ஒருவர் ஒரு பேட்டியில் பகிர்ந்து இருந்தார். “சைலண்டா இருக்க நாம என்ன தியானமா பண்றோம் ஜாலியா இருக்கிறது ஒரு குத்தமாப்பா!” என்கிறது வெங்கட் பிரபுவின் மைண்ட் வாய்ஸ்

விஜய் 68 பற்றி மகிழ்ச்சிய மகிழ்ச்சிகரமான தகவல் என்னவென்றால் டிசம்பர் 31 விஜய் 68 கான பஸ்ட் லுக்கையும் புத்தாண்டு அன்று செகண்ட் லுக் மற்றும் டைட்டிலையும் வெளியிட உள்ளனர் பட குழுவினர். ஜனவரி முதல் வாரத்தில் விஜய் 68 காக படக்குழுவினர் இலங்கை செல்ல உள்ளதாக தகவல். எது எப்படியோ இனி விஜய் 68 படப்பிடிப்பு வெங்கட் பிரபுவின் கையில் தான் உள்ளது.

Also Read: பண்றதெல்லாம் காசுக்காக, அப்புறம் சிஎம் போஸ்டுக்கு ஆசைப்பட்டால் எப்படி விஜய்? வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

Trending News