விஜய்யை வைத்து இயக்கப் போகும் அருண்ராஜா காமராஜ்.. கதை கேட்கும் போதே வெறி ஏறுதே

கடந்த 2013ஆம் வெளியான ராஜா ராணி படத்தில் காமெடி நடிகராக அறிமுகமானவர் அருண்ராஜா காமராஜ். பின்னர் சில படங்களில் தொடர்ந்து நடித்து வந்த இவர், பாடலாசிரியராகவும் பணிபுரிந்து வந்துள்ளார். 2016ஆம் ஆண்டு ரஜினியின் கபாலியில் நெருப்புடா பாடலை எழுதி பாடியதன் மூலம் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமானார்.

தொடக்கத்தில் இருந்தே டைரக்டராக வேண்டுமென இருந்த அருண்ராஜா, தன்னுடைய காலேஜ் நண்பனும் நடிகருமான சிவகார்த்திகேயனின் தயாரிப்பில் 2018ஆம் ஆண்டு “கனா” என்ற படத்தில் வெற்றிகரமான இயக்குனரானார். இயக்குனர், காமெடி நடிகர், பாடலாசிரியர், பாடகர் என பல்வேறு முகம் கொண்ட இவர் தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் “நெஞ்சுக்கு நீதி” என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார்.

இந்த படத்தின் பிரமோஷனின் போது தனியார் ஊடகத்திற்கு பேட்டியளிக்கும் போது, இவர் தனக்கு நடிகர் விஜயை இயக்க வேண்டும் என ஆசையை வெளிப்படுத்தியுள்ளார். அது குறித்து பேசுகையில், விஜய் நன்றாக எமோஷனல் காட்சிகளில் நடிக்க கூடியவர். கத்தி படத்தில் வரும் ஜீவானந்தம் கேரக்டர் எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம். அதனை ஒரு பெஞ்ச் மார்காக கொண்டு அதை தாண்டிய ஒரு கதாபாத்திரம் உருவாக்க வேண்டும் என கூறியுள்ளார்.

மேலும், விஜய் ஒரு ஒன் மேன் ராணுவம் போல நின்று பட்டையை கிளப்பக்கூடியவர். எதுவுமே இல்லை என்ற போதிலும், தனி ஆளாக நின்று கெத்துக்காட்டக் கூடிய அவருக்கு, எல்லாவற்றையும் சரியாக செய்து நடுவில் இவரை போன்ற மாஸ் நடிகரை வைத்து படம் பண்ண வேண்டும் எனவும் கூறினார்.

தெறி படத்தில் இடம்பெற்றிருந்த “டப் தெறி” என்ற பாடலின் மூலம் இவர் ஏற்கனவே விஜயுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். மாஸ்டர் படத்தின் சூட்டிங்கின் போது விஜய்யிடம் ஒரு கதையும் கூறியுள்ளார் அருண் ராஜா. கூடிய விரைவில் அந்த படம் உருவாகும் என நம்பிக்கை தனக்கு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து அட்லி, லோகேஷ் கனகராஜ், நெல்சன் திலீப்குமார் போன்ற இளைய தலைமுறை இயக்குனர்களுடன் கைகோர்த்து வரும் விஜய், இவருடனும் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என ரசிகர்கள் எதிர்ப்பார்க்கின்றனர். விஜயை வைத்து பீஸ்ட் படம் இயக்கிய நெல்சன் திலீப்குமாரிடம் தான் அருண் ராஜா காமராஜ் “கோலமாவு கோகிலா” படத்தில் துணை இயக்குநராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.