விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். இத்திரைப்படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். வருகிற ஏப்ரல் 13ம் தேதி பீஸ்ட் படம் வெளியாக இருப்பதால் தற்போது ரசிகர்கள் தாண்டி திரை பிரபலங்களும் இப்படத்தை திரையில் காண காத்திருக்கின்றனர்.
படத்தோட தீம் ஒருபக்கம் ரசிகரை சந்தோஷப்படுத்தி கிட்டே இருக்கு.மேலும் படத்தினைப் பற்றிய சின்னச்சின்ன அப்டேட்டும் படக்குழுவினர் கொடுத்து வருகின்றனர். அதனால் ரசிகர்கள் தற்போது மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளனர். தற்போது பீஸ்ட் படத்தை பார்ப்பதற்காக கம்பெனி ஒன்று தனது ஊழியர்களுக்கு விடுமுறை அளித்துள்ளது.
இப்போதுள்ள காலகட்டத்தில் லீவ் கொடுக்கிறது பெரும்பாடு இதுல ஒரு கம்பெனியில அரை நாள் லீவு கொடுத்து பீஸ்ட் படத்துக்கு டிக்கெட் எடுத்து போயிட்டு வாங்கன்னு ஒரு கம்பெனியில சொல்லி இருக்காங்க.
அந்த கம்பெனி எங்க இருக்குன்னு பார்த்தா நெல்லையில் வண்ணாரப்பேட்டை என்கிற ஒரு இடத்தில அந்த அலுவலகம் இருக்கு. உங்க கம்பெனில இருக்கும் மேலதிகாரிகள் கம்பெனியில் வேலை செய்பவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் சந்தோசத்தை கொடுக்கணும். அப்படின்னு முடிவு பண்ணி இருக்காங்க.
அங்க வேலை செய்ற எல்லாருக்கும் போன் பன்னி பீஸ்ட் படம் வரும் நாள் லீவு எடுத்துக்குங்க அப்புறம் உங்களுக்கு ஒரு டிக்கெட் வரும் போயிட்டு என்ஜாய் பண்ணுங்க அப்படி சொல்லி திக்குமுக்காட வச்சிருக்காங்க. கால் எடுக்கலைன்னா ஆபீஸ்ல போஸ்டர் போட்டு ஒட்டி இந்த நபருக்கு இந்த டிக்கெட் சீட்டு நம்பருடன் ஒட்டி வச்சிருக்காங்க. செமயா இருக்குல இந்த நியூஸ் ரொம்ப வைரலா போயிட்டு இருக்கு.
இந்த படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகமாகிக் கொண்டிருக்கிறது இப்படம் கண்டிப்பாக வசூல் ரீதியாக பெரிய அளவில் வரவேற்பை பெறும் என பலரும் கூறி வருகின்றனர். ஒவ்வொரு நாளும் ஒரு செய்தியை வந்துகிட்டே இருக்கு படம் வெளிவர உள்ள இன்னும் என்ன எல்லாம் பண்ண போறாங்களோ பொறுத்திருந்து பார்ப்போம்.