வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

பீஸ்ட் படத்தால் பெரிய அப்செட்டில் இருக்கும் பூஜா ஹெக்டே.. தளபதி கொடுத்த வாக்கு

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகியுள்ள படம் பீஸ்ட். இப்படம் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது. இந்நிலையில் விஜய்யின் 66வது படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்க உள்ளது.

தளபதி விஜயின் படங்களில் அதிகம் நடனத்திற்கும், பாடலுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். ஆனால் பீஸ்ட் படத்தில் மொத்தமாகவே ஒரே ஒரு பாடல் தானாம். அனிருத் இசையமைத்த, சிவகார்த்திகேயன் பாடல் வரிகள் எழுதிய அரபி குத்து பாடல் வெளியாகி உள்ளது.

இந்தப் பாடலிலும் பூஜா ஹெக்டேவிற்கு அந்த அளவுக்கு பெர்ஃபாமன்ஸ் கிடையாதாம். பீஸ்ட் படத்திலும் விஜய்க்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாம். இதனால் விரக்தியில் உள்ளாராம் பூஜா ஹெக்டே. அதுமட்டுமில்லாமல் விஜயின் படங்களில் ஆறு பாடல்கள் குறையாமல் இருக்கும். எல்லா பாட்டுக்களும் ஹிட்டாகும்.

ஆனால் பீஸ்ட படத்தில் ஒரே ஒரு பாடல் மட்டும் தான் உள்ளது, அதிலும் எனக்கு ஸ்கோப் இல்லை என வருத்தத்துடன் பூஜா ஹெக்டே விஜயிடம் கூறியுள்ளார். இதனால் விஜய் தன்னுடைய அடுத்த படத்தில் பூஜா ஹெக்டேக்கு வாய்ப்பு கொடுக்க உள்ளாராம்.

ஏற்கனவே தளபதி 66 படத்தில் விஜய்க்கு ஜோடியாக புஷ்பா படத்தின் மூலம் புகழ்பெற்ற ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியானது. இந்நிலையில் பூஜா ஹெக்டேவிற்கும் விஜய் வாய்ப்பு கொடுத்துள்ளதால் யார் இப்படத்தில் நடிக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தளபதி 66 படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிப்பதாகவும் தகவல் வெளியானது. அதனால் இந்த இரண்டு ஹீரோயின்களும் தளபதி 66 படத்தில் நடிக்க அதிக வாய்ப்பு உள்ளது. அதுமட்டுமல்லாமல் இப்படத்தில் தமன் இசையமைக்க உள்ளார்.

ஏற்கனவே இப்படத்தின் இயக்குனர் தளபதியின் துல்லாத மனமும் துள்ளும், பூவே உனக்காக போன்ற படங்களின் சாயலில் தளபதி 66 படம் இருக்கும் எனக் கூறி இருந்தார். இதனால் இப்படத்தில் பாடல்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும். இப்படத்தின் மூலம் பூஜா ஹெக்டே ஆசை நிறைவேறுகிறதா என்பதை பார்ப்போம்.

Trending News