செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

அப்பாவை வைத்து இயக்க மாட்டேன்.. டாப் ஹீரோக்கு அடி போட்ட தளபதியின் மகன் சஞ்சய்

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் விஜய். இவரது நடிப்பில் வெளியாக படங்கள் அனைத்துமே சமீபகாலமாக பெரிய அளவில் வரவேற்பைப் பெற்று வருகின்றன. விஜய்க்கு அந்த அளவிற்கு ரசிகர் கூட்டம் அதிகமாக இருக்கின்றன.

விஜயின் மகன் சஞ்சய் லண்டனில் மேற்படிப்பு படித்து வருகிறார் படிப்பு முடித்த பிறகு சஞ்சய் இயக்குனராக களம் இறங்க உள்ளதாக விஜயின் அப்பாவான எஸ்ஏ சந்திரசேகர் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Also read: எம்ஜிஆர், சிவாஜியை ஃபாலோ செய்த விஜய், அஜித்.. இரு தலைமுறைக்கும் இருக்கும் ஒற்றுமை

அப்போது எஸ் ஏ சந்திரசேகர் உனக்கு ஒரு பிரச்சினையும் கிடையாது நீ ஈசியாக இயக்குனராக விடலாம் என சஞ்சய்டம் கூறியுள்ளார். அதாவது விஜய் தற்போது உச்ச நட்சத்திரமாக இருக்கிறார். அதனால் உன்னுடைய அப்பாவை வைத்து நீ படத்தை இயக்கினால் கூட நீ பெரிய இயக்குனர் ஆகிவிடலம் என கூறியுள்ளார்.

ஆனால் அதற்கு சஞ்சய் தான் முதலில் படத்தை வைத்து இயக்க வேண்டும் என்றால் விஜய்சேதுபதியை வைத்து தான் இயக்குவேன் என தெரிவித்துள்ளார். அதற்கு காரணம் தன்னுடைய அப்பாவை வைத்து இயக்கினால் படம் கண்டிப்பாக வெற்றி பெறும். ஆனால் விஜய்யினால் தான் இந்த வெற்றி கிடைத்தது என பெயர் வந்துவிடும் என கூறியுள்ளார்.

Also read: விஜய்யுடன் கூட்டணி போடும் சூப்பர் ஸ்டார்.. தளபதி-67 சம்பவம் பெருசா இருக்கும் போல லோகேஷ் ப்ரோ

அதனால் முதலில் வேறொரு நடிகரை வைத்து படத்தை இயக்கி வெற்றி கண்ட பிறகு தன்னுடைய தந்தையை வைத்து இயக்கும் எண்ணம் சஞ்சய்க்கு உள்ளதாக எஸ்ஏ சந்திரசேகர் தெரிவித்துள்ளார். அந்த அளவிற்கு தன்னுடைய திறமை மீது நம்பிக்கை வைத்து இருப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும் சமீபகாலமாக சஞ்சய் குறும்படங்களை இயக்கி அதன் மூலமும் ரசிகருடன் தனது கவனத்தை ஈர்த்தார் தற்போது தன்னுடைய நண்பர்களை வைத்து குறும்படங்களை இயக்கி வரும் சஞ்சய் கூடிய விரைவில் ஒரு மிகப்பெரிய படத்தை இயக்குவார் என கூறி வருகின்றனர்.

Also read: விஜய்யின் சந்தோஷத்துக்கு ஆப்பு வைத்த வம்சி.. மருத்துவமனையிலிருந்து வந்தவுடனேயே செய்த வேலை

Trending News