திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

விஜய்க்கு கண்ணு பட்டு போச்சு.. தளபதி 66 பூஜையில் திருஷ்டி சுத்திய ராஷ்மிகா புகைப்படங்கள்

விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சமீபத்தில் பீஸ்ட் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. மேலும் விஜய் ரசிகர்கள் தாண்டி பல பிரபலங்கள் பீஸ்ட் படத்தை திரையில் காண காத்திருக்கின்றனர்.

இப்படத்திற்கு பிறகு விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் தளபதி 66 படம் உருவாக உள்ளது. இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு இரண்டு மொழிகளில் எடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின முதல் முறையாக விஜய்யுடன் வம்சி கூட்டணி அமைத்துள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

thalapathy 66
thalapathy 66

மேலும் இப்படத்தை மிக பிரம்மாண்டமாக தில் ராஜூ தயாரிக்க உள்ளார். விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளார். இதனை ராஷ்மிகா மந்தனா அவரது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். நீண்ட நாள் கனவு நிறைவேற இருப்பதாகவும் நான் விஜய்யின் தீவிர ரசிகை தற்போது அவருடன் நடிக்க இருப்பது நினைத்து மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கூறியிருந்தார்.

rashmika mandanna
rashmika mandanna

அதேபோல் தமனும் நீண்ட வருடங்களாக விஜய் அவர்கள் எனக்கு தெரியும். ஆனால் ஒரு படத்தில் கூட விஜய் அவர்களுக்கு இசையமைக்கவில்லை இப்படத்தின் மூலம் தனது கனவு நிறைவேறி விட்டதாகவும் இப்படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு பாடல்களும் கிரிக்கெட்டில் சிக்ஸர் அடிப்பது போல் வெற்றியாகத்தான் இருக்கும் எனவும் கூறியுள்ளார். மேலும் கண்டிப்பாக படத்தில் விஜய் பாடிய பாடல் இடம்பெறும் எனவும் கூறினார்.

vijay rashmika mandanna
vijay rashmika mandanna

தற்போது தளபதி 66 படத்தின் புகைப்படங்கள் வெளியாகி உள்ளதால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் சென்னை படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது பல பிரபலங்களும் இப்படத்திற்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Trending News