வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

விஜய் அஜித்துக்கு டஃப் கொடுக்கும் ஒரே போட்டியாளர்.. பெண்களின் மனதை கொள்ளை அடித்த ஸ்டார்

சினிமாவில் எல்லா காலகட்டத்திலும் ஒரு நடிகருக்கு இணையாக இன்னொரு நடிகர் போட்டி போட்டு மோதிக்கொண்டே தான் இருக்கிறார்கள். அப்படித்தான் 90களில் இருந்து இப்பொழுது வரை விஜய்க்கு அஜித்துக்கு இடையே போட்டி ஏற்பட்டு நேருக்கு நேர் மோதிக் கொண்டு வருகிறார்கள். ஆனால் இவர்கள் ஒவ்வொருவருமே சமமாக அவர்களுக்கு என்று கோடிக்கணக்கான ரசிகர்களை சம்பாதித்து வைத்திருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட இவர்கள் வளர்ந்து வரும் காலத்தில் இவர்களுக்கு டஃப் கொடுத்திருக்கிறார் ஒரு ஹீரோ. இவர்கள் சினிமாவிற்குள் நுழைந்த போது இவர்களின் வளர்ச்சியை அவரின் நடிப்பின் மூலம் தடுத்து நிறுத்தியவர் தான் அந்த ஹீரோ. இவரின் படங்களுக்கு முன்னால் விஜய் அஜித் எல்லாம் ஒன்றுமே இல்லை என்று சொல்லும் அளவிற்கு அந்த ஹீரோவின் நடிப்பு இருக்கும்.

Also read: விஜய் த்ரிஷா இணைந்து நடித்த 5 படங்கள்.. 20 வருடங்களாக தொடரும் கெமிஸ்ட்ரி

90களில் தொடர்ந்து வரிசையாக 5-6 ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த மிகப்பெரிய ஸ்டார் என்றே சொல்லலாம். அதிலும் இவருடைய டான்ஸ்க்கும், இவரின் படங்களின் கதைக்கும் ஏராளமான ரசிகர்கள் அடிமையானவர்கள் இருக்கிறார்கள். இவரின் படங்கள் ரிலீஸ் ஆனாலே மற்ற படங்கள் ஓடாது என்று சொல்லும் அளவிற்கு கொடிகட்டி பறந்தவர்.

அது மட்டுமல்லாமல் இவரின் படங்களை பார்ப்பதற்கு மட்டுமே கூட்டம் அலைமோதி கொண்டிருக்கும். அந்த நேரத்தில் விஜய் அஜித் படம் திரையரங்கில் வந்தால் அதை பார்ப்பதற்கு எந்தவித கூட்டமும் போகாது. அத்துடன் இந்த ஹீரோ கூட போட்டி போட எந்த ஹீரோவுக்கும் துணிச்சலும் இருக்காது.

Also read: காதல் மன்னனாக வலம் வந்த ஏகே.. சைட் அடித்து மாட்டி கொண்ட பிரபல நடிகை

அப்படிப்பட்ட மாஸ் ஹீரோவாக வலம் வந்தவர் தான் டாப் ஸ்டார் பிரசாந்த். அதே மாதிரி 90ஸ் காலத்தில் யார் உங்களுடைய ஃபேவரட் ஹீரோ என்று கேட்டால் அவர்கள் சொல்வது பிரசாந்தை மட்டும்தான். அப்படி எல்லாருடைய மனதிலும் இடம் பிடித்தவர். அதிலும் பெண்கள் மனதில் அதிகமாக இடம் பிடித்தவர் இவராகத்தான் இருக்க முடியும்.

அதன் பிறகு விஜய்க்கு காதலுக்கு மரியாதை அஜித்திற்கு காதல் மன்னன் என்ற படங்கள் வெளிவந்த பிறகு தான் மக்கள் இவர்களை திரும்பி பார்க்க ஆரம்பித்தார்கள். இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி இவர்கள் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து தற்போது முன்னணி ஹீரோவாக இருவரும் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் 90களில் இவர்கள் இருவரையும் ஜெயித்தவர் என்றால் அது பிரசாந்த் மட்டும்தான்.

Also read: பிரசாந்த்துடன் நேருக்கு நேர் மோதி படுதோல்வி சந்தித்த விஜய்யின் 3 படங்கள்.. 90-களில் திணறிய தளபதி

Trending News