சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

ஒரே நாளில் 10 முறை நேருக்கு நேராக மோதிய விஜய்-அஜீத்தின் படங்கள்.. அதிக வெற்றி யாருக்கு தெரியுமா.?

தமிழ் சினிமாவில் தீபாவளி, பொங்கல் என்றாலே பெரிய ஹீரோக்களின் படங்கள் வெளியாகும். அதேசமயம் இரண்டு முன்னணி ஹீரோக்களின் படங்கள் வெளியானால் யார் படம் அதிக வசூல் செய்கிறது என ரசிகர்கள் இடையே போட்டி நிலவும். இவ்வாறு ஒரே நாளில் அஜித், விஜய் திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. இதில் யாருடைய படங்கள் அதிக முறை வெற்றி பெற்றுள்ளது என்பதை பார்க்கலாம்.

கோயமுத்தூர் மாப்பிள்ளை, வான்மதி: 1996 ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 15-ஆம் நாள் விஜய்க்கு கோயமுத்தூர் மாப்பிள்ளை படமும், அஜித்துக்கு வான்மதி படமும் வெளியானது. இந்த இரண்டு படங்களுமே நேர்மையான விமர்சனத்தை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.

பூவே உனக்காக, கல்லூரி வாசல் : 1996 ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக பிப்ரவரி மாதம் விஜய், அஜித் படங்கள் மோதிக் கொண்டது. விஜய்க்கு பூவே உனக்காக படமும், அஜித்க்கு கல்லூரி வாசல் படமும் வெளியானது. விஜய்யின் திரை வாழ்க்கையில் முக்கியமாக அமைந்த பூவே உனக்காக படம் 150 நாட்களுக்கு மேல் ஓடியது. கல்லூரி வாசல் படத்தில் இரண்டாம் கதாநாயகனாக அஜித் நடித்து இருந்தார். இப்படம் எதிர்பார்த்த அளவு போகவில்லை.

காதலுக்கு மரியாதை, ரெட்டை ஜடை வயசு: 1997 இல் விஜய்யின் காதலுக்கு மரியாதை படமும் அஜித்தின் ரெட்டை ஜடை வயசு படம் நேர் எதிரே மூடிக்கொண்டது. காதலுக்கு மரியாதை படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. ஆனால் அஜித்தின் ரெட்டை ஜடை வயசு படம் மிக மோசமான தோல்வியை சந்தித்தது.

துள்ளாத மனமும் துள்ளும், உன்னை தேடி: 1999 இல் விஜயின் துள்ளாத மனமும் துள்ளும் படமும், அஜித்தின் உன்னைத்தேடி படமும் வெளியானது. துள்ளாத மனமும் துள்ளும் படம் 150 நாட்களுக்கு மேல் வெற்றிகரமாக ஓடியது. அதேபோல் அஜித்தின் உன்னைத்தேடி படமும் 100 நாட்களுக்கு மேல் ஓடி வெற்றி பெற்றது.

குஷி, உன்னை கொடு என்னை தருவேன்: 2000 ஆண்டு விஜய்யின் குஷி படமும், அஜித்தின் உன்னை கொடு என்னை தருவேன் படமும் ஒரே நாளில் வெளியானது. எஸ்ஜே சூர்யா இயக்கத்தில் விஜய்யின் குஷி படம் மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. ஆனால் அஜித்தின் உன்னை கொடு என்னை தருவேன் படம் வெற்றி பெறவில்லை.

பிரண்ட்ஸ், தீனா: 2001 இல் விஜய்க்கு பிரண்ட்ஸ் படமும், அஜித்துக்கு தீனா படமும் வெளியானது. முருகதாஸ் இயக்கத்தில் வெளியான தீனா படம் அஜித்தை மாஸ் ஹீரோவாக காட்டியது. விஜய்க்கும் பிரண்ட்ஸ் படம் மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. அந்த ஆண்டு வெளியான இந்த இரண்டு படமுமே பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.

பகவதி, வில்லன்: 2002ஆம் ஆண்டு விஜய்க்கு பகவதி படமும், அஜித்துக்கு வில்லன் படமும் வெளியானது. கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் அஜித்தின் வில்லன் படம் மிகப்பெரிய வெற்றி பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. ஆனால் பகவதி படம் நேர்மையான விமர்சனங்களை பெற்றாலும் வெற்றி பெறவில்லை.

திருமலை, ஆஞ்சநேயா: 2003 இல் விஜய்க்கு திருமலை படமும், அஜீத் ஆஞ்சநேயா படமும் வெளியானது. விஜய்யின் திருமலை படம் ஓரளவு நேர்மையான விமர்சனங்களை பெற்று வெற்றிபெற்றது. அஜித்தின் ஆஞ்சநேயா படம் மிக மோசமான தோல்வியை சந்தித்தது.

ஆதி, பரமசிவன்: 2006ஆம் ஆண்டு விஜய்யின் ஆதி படமும், அஜித்தின் பரமசிவன் படமும் ஒரே நாளில் வெளியானது. விஜயின் ஆதி படம் மிகப்பெரிய தோல்வியடைந்தது. அஜித்தின் பரமசிவன் படம் ஓரளவு லாபம் தந்தாலும் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை.

ஜில்லா, வீரம்: பல வருடங்களுக்குப் பிறகு 2014ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய், அஜித் படங்கள் ஒரே நேரத்தில் வெளியானது. விஜய்யின் ஜில்லா படமும், அஜித்தின் வீரம் படமும் நேர்மையான விமர்சனங்களை பெற்றது. அந்த ஆண்டு வெளியான இந்த இரண்டு படங்களுமே ப்ளாக்பஸ்டர் ஹிட் ஆனது.

Trending News