வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

விஜய், அஜித்துக்கு முதலமைச்சராகவும் யோகம் உண்டா.? ஜோசியரை நம்பும் சினிமா

Vijay – Ajith : எம்ஜிஆர் முதல் தற்போது கட்சி தொடங்கி இருக்கும் தளபதி விஜய் வரை அரசியலில் ஜோசியத்தை நம்புவது வழக்கமாகத்தான் இருக்கிறது. அதுவும் ஜெயலலிதா கடவுள் நம்பிக்கை அதிகம் உள்ளவர். அதேபோல் ஜோசியத்திலும் அதிக ஈடுபாடுடன் இருக்கக்கூடியவர்.

இந்நிலையில் ஜோசியம் சிலருக்கு பழித்தாலும் பலருக்கு பொய்த்துதான் போயிருக்கிறது. ஏனென்றால் முக ஸ்டாலின் முதலமைச்சர் அரியணையை ஏற முடியாது என பல ஜோசியர்கள் முன்பு கூறியிருந்தனர். அதைப் பொய்யாக்கி கடந்த சட்டமன்ற தேர்தலில் ஸ்டாலின் முதலமைச்சர் பதவியை ஏற்றார்.

இப்போது விஜய் வேக வேகமாக அரசியல் கட்சி தொடங்குவதற்கு காரணமும் ஜோசியம் தான் என்று கூறப்படுகிறது. அதாவது விஜய்க்கு முதலமைச்சராகும் யோகம் இருப்பதாக ஜோசியர் கூறியுள்ளார். இதை நம்பி தான் விஜய் கட்சி ஆரம்பித்திருக்கிறாராம்.

Also Read : தளபதி விஜய்யின் கடைசி படம்.. அடக்க முடியாமல் சிரிக்கும் வெற்றிமாறன்

மேலும் தமிழக வெற்றி கழகம் என்று கட்சியின் பெயரையும் அறிவித்து விட்டார். ஆனால் ஜோசியத்தில் 2035-க்கு பிறகு விஜய் முதலமைச்சராக வாய்ப்பு இருக்கிறது என்று கூறி இருக்கின்றனர். ஒருவேளை இதற்கு முன்னதாகவே விஜய்க்கு முதலமைச்சர் பதவி ஏறும் வாய்ப்பு கிடைத்தாலும் இந்த ஜோசியம் பொய்யாக மாற வாய்ப்பிருக்கிறது.

இதே போல் ஜோசியத்தை நம்பி பல ஹீரோக்கள் சினிமாவில் கட்சி தொடங்கியது உண்டு. அவ்வாறு அஜித்துக்கும் முதலமைச்சராகும் யோகம் இருக்கிறது என ஜோசியர் கூறியிருக்கிறார். அதை அஜித் கண்டு கொள்ளவில்லையாம், தனக்கு அரசியல் வேண்டாம் என்று ஒதுங்கி விட்டார். விஜய்க்கு எந்த அளவு ஜோசியம் கை கொடுக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Also Read : விஜய்க்கு போட்டியாக கட்சி தொடங்கும் அனகோண்டா.. எங்க வந்து யார் நிற்கிறது.? ஓவர் நக்கல்!

Trending News