திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

இணையத்தை அதகளம் செய்யும் விஜய், அஜித் ரசிகர்கள்.. ட்ரெண்டாகும் ஹேஷ் டேக்குகள்

சாதாரணமாகவே விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் இடையே இணையத்தில் கடுமையான போட்டி நிலவி வருகிறது. ஒருவருக்கொருவர் மாற்றி மாற்றி ட்ரோல் செய்து வீடியோக்கள் வெளியாகி வருகிறது. சில சமயங்களில் எல்லை மீறி சண்டையும் போட்டுக் கொள்கிறார்கள். இதனால் பல பிரச்சனைகளும் சந்திக்க நேரிடுகிறது.

தனித்தனியாக இவர்கள் படம் வெளியானாலே இந்த நிலைமை என்றால் வருகின்ற பொங்கல் பண்டிகைக்கு விஜயின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு படம் போட்டியிடுகிறது. கிட்டத்தட்ட எட்டு வருடங்களுக்கு பிறகு இவர்கள் இருவரும் போட்டி போட உள்ளனர். ஆகையால் இப்போதே அஜித், விஜய் வைத்து இணையத்தில் ட்ரோல் செய்த வருகிறார்கள்.

Also Read : தளபதி 67 க்கு அட்டகாசமாக ரெடியான விஜய்.. சோசியல் மீடியாவை கலக்கும் போட்டோ

இந்த இரு படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வரும் சமயத்தில் அஜித் ரசிகர்கள் “துணிவில்லா வாரிசு” என்ற ஹேஷ் டேக்கை டிரெண்ட் செய்து வருகிறார்கள். அதேபோல் விஜய் ரசிகர்கள் “வாரிசிடம் குணிவு” என்ற ஹேர் டேக்கை ட்ரெண்டாக்கி வருகிறார்கள்.

வாரிசு மற்றும் துணிவு படங்கள் வெளியாக இன்னும் ஒரு மாதம் உள்ள நிலையில் இப்போதே இவர்களுக்குள் இணையத்தில் போட்டி ஆரம்பித்து விட்டது. இனி படத்தின் ப்ரோமோஷன் காட்டிலும் இவர்களது சண்டை தான் அதிக அளவில் பேசப்பட உள்ளது. அஜித், விஜய் இருவருமே நட்பாக தான் பழகி வருகிறார்கள்.

Also Read : 2ம் இடத்திற்கு தள்ளப்பட்ட விஜய்யின் ரஞ்சிதமே.. லேட்டா வந்தாலும் கெத்து காட்டிய அஜித்

ஆனால் அவர்களது ரசிகர்கள் இவ்வாறு சண்டையிட்டுக் கொள்வது எரிச்சல் தரும் விஷயமாக உள்ளது. அதுமட்டுமின்றி சில சமயங்களில் இவர்கள் எல்லை மீறியும் போகிறார்கள். ஆகையால் அஜித் மற்றும் விஜய் இருவரும் தலையிட்டு தங்களது ரசிகர்களிடம் வேண்டுகோள் வைத்தால் மட்டுமே இதற்கு ஒரு முடிவு வரும்.

ஏனென்றால் அஜித் தன்னை தல என்று அழைக்க வேண்டாம் என ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்ததில் இருந்து யாரும் அவரை அப்படி கூப்பிடுவதில்லை. அதேபோல் விஜய் பேச்சுக்கும் அவரது ரசிகர்கள் கட்டப்பட்ட நடக்கின்றனர். ஆகையால் இவர்களால் மட்டுமே இதற்கு ஒரு முடிவு கட்ட முடியும்.

Also Read : ஒரே காரியத்தை சாதிக்க 3 முதல்வரை சந்தித்த தளபதி விஜய்.. அரசியலை மிஞ்சின சூழ்ச்சி

Trending News