செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

10 முறை நேருக்கு நேராக மோதிக்கொண்ட அஜித், விஜய் படங்கள்.. அதிக வெற்றி யாருக்கு தெரியுமா?

ஒவ்வொரு காலகட்டத்திலும் இரு நடிகர்கள் இடையே கடுமையான போட்டி நிலவும். ஆனால் ஒரே நாளில் இந்த நடிகர்களின் படங்கள் வெளியானால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவும். அவர் பத்து முறை விஜய் மற்றும் அஜித் படங்கள் ஒரே நேரத்தில் வெளியாகியுள்ளது. அதில் யார் அதிக வெற்றி பெற்றுள்ளார் என்பதை தற்போது பார்க்கலாம்.

ஜில்லா, வீரம் : கடந்த 2014 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி மாதம் அஜித்தின் வீரம் படமும், விஜய்யின் ஜில்லா படமும் வெளியானது. இந்த இரண்டு படமுமே பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூல் பெற்று சூப்பர் ஹிட் படமாக அமைந்தது.

போக்கிரி, ஆழ்வார் : கடந்த 2007 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளியான திரைப்படம் ஆழ்வார் மற்றும் போக்கிரி. பிரபுதேவா இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான போக்கிரி படம் தாறுமாறான வெற்றியடைந்தது. இப்படத்திற்கு போட்டியாக வெளியான அஜித்தின் ஆழ்வார் படம் மிக மோசமான தோல்வியை சந்தித்தது.

ஆதி, பரமசிவன் : கடந்த 2006 ஆம் ஆண்டு அஜித், விஜய்யின் படங்கள் ஜனவரி 14-ஆம் தேதி ஒரே நாளில் வெளியானது. விஜய்யின் ஆதி படமும், அஜித்தின் பரமசிவன் படமும் நேருக்கு நேராக மோதிக்கொண்டு இரண்டுமே படுதோல்வியை சந்தித்தது.

Also Read : படு கேவலமாக நடந்து கொள்ளும் விஜய், அஜித் ரசிகர்கள்.. குப்பை கிடங்காக மாறிய இணையதளம்

திருமலை, ஆஞ்சநேயா : கடந்த 2003 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் மாதம் விஜய்யின் திருமலை மற்றும் அஜித்தின் ஆஞ்சநேயா படம் வெளியானது. திருமலை படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற பாக்ஸ் ஆபிஸில் இடம் பெற்றது. ஆனால் அஜித்தின் ஆஞ்சநேயா படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது.

 பகவதி, வில்லன் : கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் விஜய், அஜித்தின் படங்கள் ஒரே நாளில் வெளியாகி இருந்தது. இதில் வெங்கடேஷ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பகவதி படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. ஆனால் அஜித்தின் வில்லன் படம் மாபெரும் வெற்றி பெற்றிருந்தது.

 பிரண்ட்ஸ், தீனா : இயக்குனர் ஏ ஆர் முருகதாஸின் முதல் படமான தீனா படத்தில் அஜித் நடித்திருந்தார். இப்படம் 2001 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. இதே ஆண்டு தீனா படத்துடன் போட்டி போட்டு விஜய்யின் பிரண்ட்ஸ் படமும் அதிக நாள் திரையரங்குகளில் ஓடி வெற்றி பெற்றது.

Also Read :அக்கட தேசத்து நடிகரை அலேக்காக தூக்கிய லோகேஷ்.. தளபதி 67 வில்லனாக மிரட்டபோகும் மாஸ் நடிகர்

 குஷி, உன்னை கொடு என்னை தருவேன் : தளபதி விஜயின் வாழ்க்கையில் மிகப்பெரிய விருப்பமுனையாக அமைந்தது எஸ் ஜே சூர்யா இயக்கத்தில் வெளியான குஷி படம். இப்படத்திற்கு போட்டியாக அஜித்தின் உன்னை கொடு என்னை தருவேன் படம் வெளியாகி மோசமான தோல்வியை சந்தித்தது.

துள்ளாத மனமும் துள்ளும், உன்னை தேடி : எழில் இயக்கத்தில் விஜயின் துலாத மனமும் துள்ளும் படம் வெளியாகி பிரம்மாண்ட வெற்றியை அடைந்தது. இதே ஆண்ட அஜித் நடிப்பில் வெளியான உன்னை தேடி படமும் விமர்சன ரீதியாகப் பாராட்டைப் பெற்று ஓரளவு லாபத்தை பெற்று தந்தது.

பூவே உனக்காக, கல்லூரி வாசல் : கடந்த 1996 ஆம் ஆண்டு விஜயின் பூவே உனக்காக படமும் அஜித்தின் கல்லூரி வாசல் படமும் ஒரே நாளில் வெளியானது. குடும்பப் படமாக வெளியான பூவே உனக்காக படம் 150 நாட்களை தாண்டி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியது. ஆனால் அஜித்தின் கல்லூரி வாசல் படம் பெரிய அளவில் போகவில்லை.

Also Read :காதுகளை பாதுகாத்துக்கோங்க, அஜித் எச்சரித்த 3 விஷயங்கள்.. வெளிவந்தது விடுகதைக்கான விடை

கோயமுத்தூர் மாப்பிள்ளை, வான்மதி : முதல் முதலாக 1996 இல் அஜித், விஜய் படங்கள் ஒரே நாளில் வெளியானது. விஜயின் கோயமுத்தூர் மாப்பிள்ளை படமும், அஜித்தின் வான்மதி படமும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இரண்டு படமுமே வெற்றி பெற்றது.

Trending News