திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

மெத்தனத்தில் இருக்கும் விஜய் அண்ட் கோ.. லீக் விஷயத்தில் இருந்து கடும் அப்செட்டில் தளபதி

விஜய் தற்போது வாரிசு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் இந்த திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என்று பட குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஆனால் இப்படத்தின் சூட்டிங் இன்னும் முடியவில்லையாம்.

எப்போதோ முடிந்திருக்க வேண்டிய படப்பிடிப்பு இன்னும் முடியாமல் இழுத்தடித்து வரும் நிலையில் இயக்குனர் இன்னும் 40 நாட்கள் ஷூட்டிங் நடத்த வேண்டும் என்று கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறார். அதில் விஜய் மட்டுமே 18 நாட்கள் வரை கால்ஷீட் கொடுக்க வேண்டுமாம். அது மட்டுமல்லாமல் கிளைமாக்ஸ் காட்சிகளை மட்டுமே ஐந்து நாட்கள் தனியாக எடுக்க இருக்கிறார்கள்.

Also read : அடிமாட்டு விலைக்கு நடந்த வியாபாரம்.. ஆஸ்தான தயாரிப்பாளரை வைத்து காய் நகர்த்திய விஜய்

அதற்காக படக்குழு தற்போது சென்னைக்கு வர இருக்கிறார்கள். இதனால் குறித்த தேதிக்குள் படப்பிடிப்பு முடிந்து விடுமா என்ற பதட்டம் விஜய்க்கு இருக்கிறதாம். ஆனாலும் இயக்குனர் எப்படியும் படப்பிடிப்பை முடித்து படத்தை சொன்ன தேதியில் ரிலீஸ் செய்து விடலாம் என்று நம்பிக்கையாக கூறி இருக்கிறாராம்.

ஏற்கனவே படப்பிடிப்பு ஆரம்பத்தில் இருந்து ஏகப்பட்ட பிரச்சனைகள் வந்து கொண்டிருக்கிறது. அதிலும் சூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட போட்டோக்கள் லீக் ஆனதிலிருந்தே விஜய் கடும் அப்செட்டில் இருக்கிறாராம். எவ்வளவோ கெடுபிடிகள் போட்டு சூட்டிங் நடத்தியும் போட்டோக்கள் அடுத்தடுத்து வெளியாகி வருவது அவரை கோபத்தின் உச்சிக்கே கொண்டு சென்றிருக்கிறது.

Also read : வந்தா மலை போனா மசுரு.. வாரிசை ஒரு கை பார்க்க, துணிவுடன் ரிலீஸ் தேதியை லாக் செய்த உதயநிதி

அதைப் பார்த்து பட குழுவினர் அனைவரும் அரண்டு போன நிலையில் தற்போது சூட்டிங் இன்னும் முடியாமல் இருப்பதால் விஜய்யின் கோபம் அதிகரித்து விடுமோ என்ற பயமும் அவர்களுக்கு இருக்கிறதாம். இதனால் அவரை கூல் செய்யும் விதமாக இயக்குனர் ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்து கொண்டிருக்கிறாராம்.

அது மட்டுமல்லாமல் துணிவு திரைப்படமும் தற்போது போட்டிக்கு வந்த நிலையில் இயக்குனர் இப்படி மெத்தனமாக இருப்பது தான் விஜய்க்கு பதட்டத்தை அதிகரித்திருக்கிறது. எனினும் வாரிசு திரைப்படம் நிச்சயம் ரசிகர்களை கவர்ந்து நல்ல வசூலை பெறும் என்ற நம்பிக்கையில் பட குழுவினர் இருக்கின்றனர்.

Also read : தளபதி 67 படத்தில் சம்பளத்தை குறைத்த விஜய்.. பின்னால் இருக்கும் காரணம்

Trending News