திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

வாரிசு சூட்டிங் ஸ்பாட்டில் கோவப்பட்ட விஜய்.. அதிரடியாக எடுத்த முடிவு

வம்சி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகி வரும் படம் வாரிசு. இப்படத்தில் விஜய், ரஷ்மிகா மந்தனா, சரத்குமார் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். மேலும் தில் ராஜு இப்படத்தை தயாரித்து வருகிறார்.

இந்த சூழலில் தற்போது வாரிசு சூட்டிங் ஸ்பாட்டில் விஜய் கோபப்பட்டு அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம். அதாவது வாரிசு படப்பிடிப்பில் எடுக்கப்படும் புகைப்படங்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வருகிறது. இது படகுழுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Also Read :காலை வாரிவிட்ட பிரின்ஸ் படம்.. உச்சகட்ட பயத்தில் இருக்கும் விஜய், தனுஷ்

இதற்காக பல கட்டுப்பாட்டுகள் விதித்தும் மீண்டும் மீண்டும் புகைப்படம் வெளியாகி வருகிறதாம். அதுவும் பாடல் எடுக்கும் காட்சி தான் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதனால் கேமராவுக்கு பின்னால் ஜிம் பாய்ஸ் நிறைய பேர் இருந்துள்ளனர். இவர்கள் எல்லோரையுமே விஜய் வெளியே அனுப்பி விட்டாராம்.

அதாவது அவர்கள் வேலையை முடித்துவிட்டு அனுப்பி விடுங்கள், வேறு புதிய ஜிம் பாய்ஸை வைத்துக் கொள்ளலாம் என வாரிசு பட குழுவிடம் விஜய் கூறியுள்ளார். ஏனென்றால் இவர்களால் தான் வாரிசு சூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் வெளியே வந்திருக்கும் என விஜய் சந்தேகப்பட்டு உள்ளார்.

Also Read :கழுத்தை நெரித்த கடன் தொல்லை.. விஜய்க்காக எதையும் எதிர்பார்க்காமல் காப்பாற்றிவிட்ட மூத்த நடிகர்

தீபாவளியன்று வாரிசு படத்தின் முதல் சிங்கிள் வெளியாகும் என ரசிகர்கள் மிகுந்த ஆர்வமுடன் காத்திருந்தனர். ஏனென்றால் வாரிசு படம் பொங்கல் ரிலீஸ்க்கு தான் தயாராகி வருகிறது. இதனால் கண்டிப்பாக படக்குழு முதல் பாடலை வெளியிடும் என எதிர்பார்த்தது.

ஆனால் வாரிசு படத்தின் புதிய போஸ்டர் மட்டும் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர். போஸ்டரில் விஜயின் கெட்டப்பை பார்ப்பதில் ஆக்சன் நிறைந்த படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் மிக விரைவில் வாரிசு படத்தில் அடுத்தடுத்த அப்டேட் வெளியாக காத்திருக்கிறது.

Also Read :தீபாவளியன்று சரவெடியாய் வெளிவந்த வாரிசு போஸ்டர்.. சம்பவம் செய்யும் தளபதி

Trending News