திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

விஜய் 68-ல் ஜோதிகா கடுப்பில் விஜய்.. பழைய கணக்கை தீர்க்க சரியான நேரம்.!

Thalapathy 68: வெங்கட் பிரபுவின் 14 வருட தவத்திற்கு கிடைத்த பலனாய் விஜய்யின் 68ஆவது படத்தை இயக்குவதற்கான வாய்ப்பை பெற்றிருக்கிறார். ஏஜிஎஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு யார் கதாநாயகி என்பதுதான் தற்போது ஹாட் டாபிக்காக பேசப்படுகிறது.

விஜய் 68 படத்திற்கான வேலைகள், கதை விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. லியோ படத்திற்கு பின்பு தான் இதன் அப்டேட்டை கூற வேண்டும் என விஜய் கூறியதால் வெங்கட் பிரபு அமைதி காத்து வருகிறார். ஆனால் அதை மீறி ஒரு சில அப்டேட்டுகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

Also Read: ஒரே நாளை குறிவைத்து வர போகும் 3 அப்டேட்டுகள்.. கோடம்பாக்கம் முதல் கோட்டை வரை தெறிக்கவிடும் தளபதி

அதில் ஒன்றாக படத்தின் ஹீரோயின் யார் என்று பரபரப்பாக பேசப்படுகிறது. இந்த படத்திற்கு வெங்கட் பிரபு ஜோதிகாவை நடிக்க வைக்க ஆசைப்படுகிறார். காரணம் விஜய் ஜோதிகாவின் கலகலப்பான படம் குஷி மாதிரி அமைய வேண்டும் என்ற எண்ணத்தில் வெங்கட் பிரபு இந்த முடிவை எடுத்திருக்கிறார்.

இதை அனைவரும் ஏற்றுக்கொண்டனர். ஆனால் விஜய் இடம் கூறவில்லை. ஏற்கனவே மெர்சல் படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஜோதிகா நடிக்க வேண்டியது. ஜோதிகாவுக்கு பிடித்த மாதிரி சில காட்சிகளை மாற்ற சொன்னார். ஆனால் அட்லி அதை செய்யாததால் நடித்துக் கொண்டிருக்கும் பொழுதே விஜய்யிடம் சொல்லாமல் வெளியேறினார்.

Also Read: வாயிலையே வடை சுடும் வெங்கட் பிரபு.. அப்சட்டில் இருக்கும் தளபதி-68 டீம்

அதன் பிறகு நித்யா மேனன் ஜோதிகாவிற்கு பதிலாக நடித்தார். ஆனால் அந்த சம்பவத்தால் ஜோதிகா மீது செம கடுப்பில் விஜய் இருக்கிறார். இந்த படத்தில் ஜோதிகா கதாநாயகியாக வந்தால் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள மாட்டார், வேறு சின்ன வயது உள்ள நடிகைகளை தான் நடிக்க வைப்பார்.

ஆனால் வெங்கட் பிரபு தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் இந்த விஷயத்தை சாதிக்க வேண்டும் என நினைக்கிறார் விரைவில் லியோ படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்து தளபதி 68 படத்தில் இணையும் விஜய்யிடம் ஜோதிகா தான் படத்தின் கதாநாயகி எனசொல்லப் போகின்றனர். அதன் பிறகு விஜய் எடுக்கும் முடிவில் தான் யார் கதாநாயகி என்பது உறுதியாக தெரியவரும்.

Also Read: பிரம்மாண்டமா ஒரு படம் பண்ணியாச்சு, கமர்ஷியலா ஒரு ஹிட் கொடுக்கலாம் வெங்கட்.. கட்டளையிட்ட விஜய்

Trending News