புதன்கிழமை, ஜனவரி 15, 2025

மிரட்டலாக இருக்கும் விஜய் ஆண்டனி.. கொலை பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

தமிழ் சினிமாவில் நடிகர்கள் நடித்தால் மட்டுமே திரைப்படம் திரையரங்குகளில் ஓடும் என்னும் எழுதப்படாத விதியை மாற்றி அமைத்தவர் தான் இசை அமைப்பாளரும் நடிகருக்கான விஜய் ஆண்டனி. இவரது முதல் படமான நான் திரைப்படம் ஹிட்டடித்த நிலையில், விஜய் ஆண்டனியின் நடிப்பு பெரும் அளவில் பேசப்பட்டது. இதை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வரும் விஜய் ஆண்டனி எப்போதுமே தன் திரைப்படங்களில் நெகட்டிவ் டைட்டில்களை பயன்படுத்துவார். இதனிடையே தற்போது விஜய் ஆண்டனி நடித்த கொலை திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டு இயக்குனர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் திரைப்படம் பிரம்மாண்ட வெற்றியை கொடுத்தது மட்டும் இல்லாமல் விஜய் ஆண்டனியின் திரை வாழ்க்கையை புரட்டிப் போட்ட திரைப்படமாகவும் பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் போஸ்டர் கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்டது. ஆன்ட்டி பிகிலி எனும் கதாபாத்திரம் இத்திரைப்படத்தில் இடம் பெற்றிருப்பதை உறுதி செய்தனர்.

மேலும் ஆன்ட்டி பிகிலி போஸ்டருடன் பிச்சைக்காரன் 2 திரைப்படத்தின் தீம் பாடலும் இணையத்தில் வெளியாகி வைரல் ஆனது. இதைத்தொடர்ந்து இயக்குனர் பாலாஜி குமார் இயக்கத்தில் இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ் மற்றும் லோட்டஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் கொலை திரைப்படத்தின் சூப்பரான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

நடிகை ரித்திகா சிங்,ராதிகா சரத்குமார், மீனாட்சி சாவுத்ரி, முரளி கிருஷ்ணா, கிஷோர் குமார் உள்ளிட்டோர் நடித்துள்ள கொலை திரைப்படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில் டிடெக்டர் போல விஜய் ஆண்டனி தொப்பி, கருப்பு கோட் அணிந்து கொண்டு நடிகை ராதிகா ,முரளி சர்மா உள்ளிட்ட நடிகர்களின் ஐந்து புகைப்படங்கள் இடம் பெற்ற பேப்பர்களை, தன் நடுவிரலில் விஜய் ஆண்டனி பிடித்துள்ளது போல் போஸ்டர் வெளியாகியுள்ளது.

தமிழில் கொலை டைட்டிலிலும், தெலுங்கில் ஹத்யா டைட்டிலும் வெளியிடப்பட்ட இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மூலமாகவே இத்திரைப்படத்தின் கதைக்களம் யூகிக்க முடிவதாக அமைந்துள்ளது. ஒரு கொலை நடந்ததை விஜய் ஆண்டனி கண்டுபிடிப்பதற்காக போராடும் கதைக்களம் இத்திரைப்படத்தில் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.

kolai
kolai

சஸ்பென்ஸ் த்ரில்லராக கொலை திரைப்படம் உருவாகி கொண்டிருக்கும் வேளையில் விஜய் ஆண்டனியின் அடுத்த படமான மழை பிடிக்காத மனிதன், ரத்தம் உள்ளிட்ட திரைப்படத்தின் அப்டேட் போஸ்டரும் வெளியாகி உள்ளது. பொதுவாகவே தான் நடிக்கும் திரைப்படங்களில் விஜய் ஆண்டனியின் இசை அமைந்திருக்கும் ஆனால் தற்போது மற்ற பல நடிகர்களின் திரைப்படங்களில் விஜய் ஆண்டனி இசை அமைக்க கமிடாகாமல் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News