Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்

மிரட்டும் விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’.. ரிலீஸுக்குத் தயார்

மிரட்டும் விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’.. ரிலீஸுக்குத் தயார்

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள அப்பா குட்டி திரைப்படம் வரும் நவம்பர் 20ஆம் தேதி வெளியாக உள்ளது.

தமிழ் சினிமாவில் சிறந்த இசையமைப்பாளராக வெற்றி பெற்ற விஜய் ஆண்டனி, ஹீரோவாக உருவெடுத்த பிறகும் தன்னை ஒரு நடிகராகக் காட்டிக்கொள்வதை விட, கதையின் நாயகனாகவே வெளிப்படுத்தி வருகிறார்.

தன்னை ஒரு மினிமம் கியாரண்டி நாயகனாக நிலைநிறுத்திக் கொண்ட அவர், பாக்ஸ் ஆபீஸிலும் பல வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளார். குறிப்பாக, அவருடைய பிச்சைக்காரன் திரைப்படம் தமிழில் மட்டுமின்றி மற்ற மொழிகளிலும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பளிப்பது, வித்தியாசமான தலைப்புகளில் படங்களைத் தேர்வு செய்வது, ஓப்பனிங் பாடல்கள் மற்றும் பஞ்ச் வசனங்கள் இல்லாத கதைகளைத் தேர்ந்தெடுப்பது என விஜய் ஆண்டனியின் படங்கள் தனித்துவமான பாணியைக் கொண்டுள்ளன.

அதேபோல், அவரது இயல்பான நடிப்பும் எந்தவிதமான கதைக்களத்திற்கும் அவர் பொருத்தமாக இருப்பதற்குக் காரணமாக அமைந்துள்ளது. அடுத்ததாக, கண்ணை நம்பாதே, இரவுக்கு ஆயிரம் கண்கள் ஆகிய படங்களை இயக்கிய மு. மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள அப்பா குட்டி திரைப்படம் வெளியாக உள்ளது.

இப்படத்தின் டிரெய்லர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

V

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.