திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

படப்பிடிப்பில் தனக்கு நடந்த மோசமான ஆக்சிடென்ட்.. உயிரைக் காப்பாற்றியது யாருன்னு தெரிவித்த விஜய் ஆண்டனி

விஜய் ஆண்டனி தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பிச்சைக்காரன் 2 படத்தை தயாரித்திருக்கிறார். இந்த படத்தை விஜய் ஆண்டனியே இயக்கி, இசையமைத்துள்ளார். படத்தில் காவியா தாப்பர் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் ராதா ரவி, ஒய்.ஜி. மகேந்திரன், மன்சூர் அலிகான், ஜான் விஜய், யோகி பாபு உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ளனர். ஓம் நாராயணன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் படத்தின் முதல் பாகம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனால் இரண்டாம் பாகத்தை எடுக்கும்படி சசியிடம் கேட்டுக் கொண்டார். ஆனால் அவர் மறுத்துவிட்டதால் விஜய் ஆண்டனியே இந்த படத்தை இயக்கினார்.

Also Read: விஜய் ஆண்டனி உடன் நேருக்கு நேராக மோதும் மாஸ்டர்.. ரேசில் திடீரென்று நுழைந்த 3வது ஹீரோ

அதுமட்டுமல்ல தயாரிப்பாளராகவும் அதிக பட்ஜெட்டில் படத்தை தயாரித்துள்ளார். இந்நிலையில் இந்த படத்திற்கான ஷூட்டிங் லங்காவி தீவில் நடைபெற்றது. அப்போது விஜய் ஆண்டனிக்கு பயங்கர விபத்து ஏற்பட்டது. இதனால் ஐசியூ-வில் பல நாள் படுத்த படுக்கையாக கிடந்த விஜய் ஆண்டனி, இப்போது முழுவதுமாக குணமடைந்துள்ளார். பிச்சைக்காரன் 2 படம் வரும் 19ஆம் தேதி ரிலீஸ் ஆகுவதால் படக்குழுவினருடன் இணைந்து படத்திற்கான ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் விஜய் ஆண்டனியும் சேர்ந்து கலந்து கொண்டுள்ளார்.

அப்போது விஜய் ஆண்டனி தனக்கு நடந்த விபத்தை குறித்து முதல் முதலாக பேசியிருக்கிறார். படப்பிடிப்பின் போது கேமராவின் அருகே சென்றால் தான் அவர்களால் சரியாக காட்சிப்படுத்த முடியும் என, அவர்களது படகிற்கு மிக அருகில் என்னுடைய சி பைக்கில் கதாநாயகி உடன் சென்றேன். ஒருமுறை சரியாக செய்து விட்டேன். ஆனால் இரண்டாவது முறை இன்னும் சாகசம் செய்து பார்க்கலாம் என நினைத்துக் கொண்டு வேகமாக வந்த அலையை பொருட்படுத்தாமல் சென்று விட்டேன்.

Also Read: அடிமேல் அடி வாங்கும் விஜய் ஆண்டனி.. படத்தை திரையரங்கில் வெளிவரத்துக்கு கூட வாய்ப்பில்லையாம்

அதனால் கேமரா மேன்கள் இருந்த போட்டில் என்னுடைய முகம் மோதி மூக்கு, தாடை பகுதிகள் உடைந்து நடுக்கடலில் மயங்கி விழுந்து விட்டேன். ஒருமுறை நீருக்குள் முங்கி விட்டேன். அதன் பின் சரியான சமயத்தில் கதாநாயகியும் ஒளிப்பதிவாளர் ஓம் மற்றும் மற்ற உதவி கேமராமேன்களும் சேர்ந்து தான் என்னைக் காப்பாற்றினார்கள். தண்ணீருக்குள் மூழ்கியதால் நிறைய தண்ணியை குடித்து விட்டேன். அதனால் முதலுதவி செய்து மருத்துவமனையில் அனுமதித்தனர். ஒரு பெரிய ஆக்சிடென்ட்டில் இருந்து உயிர் தப்பித்துள்ளேன்.

இப்போது நலமாக இருக்கிறேன், எந்த குறையும் இல்லை. பிச்சைக்காரன் 2 படப்பிடிப்பு ஆக்சிடென்ட் நடப்பதற்கு முன்பு இருந்ததை விட இப்போது பல மடங்கு புத்துணர்ச்சியுடன் இருக்கிறேன். ஸ்ட்ராங்காவும் மாறிவிட்டேன் என்று விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் 2 பட புரொமோஷன் நிகழ்ச்சியில் முதல் முதலாக தனக்கு நேர்ந்த விபத்தை குறித்து விவரித்துள்ளார். இந்த பேட்டியை கேட்ட விஜய் ஆண்டனியின் ரசிகர்கள் உயிர்பிழைத்து மீண்டும் வந்த அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர்.

Also Read: பிச்சைக்காரன் 2 பட கதை இதுதான்.. தேறி வரும் விஜய் ஆண்டனிக்கு அடுத்தடுத்த சோதனை

Trending News