Kolai Twitter Review: பாலாஜி குமார் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, ரித்திகா சிங், மீனாட்சி சவுத்ரி, ராதிகா சரத்குமார் நடிப்பில் இன்று வெளிவந்துள்ள படம் தான் கொலை. சஸ்பென்ஸ், திரில்லர், மர்மம் என அனைத்தும் கலந்த கலவையாக வந்த இப்படத்தின் ட்ரெய்லர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.

அதைத்தொடர்ந்து தற்போது படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் தங்கள் விமர்சனங்களை ட்விட்டர் தளத்தில் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ரசிகர்கள் அனைவரும் கூறும் ஒரே விஷயம் விஜய் ஆண்டனி தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு கதைக்களமும் சிறப்பாக அமைந்திருக்கிறது என்பது தான்.
Also read: என் லெவலுக்கு விஜய் ஆண்டனி கூட எல்லாம் நடிக்க முடியாது.. கால்ஷீட் கொடுத்து ஏமாற்றிய ஹீரோயின்
அதிலும் அவருடைய அலட்டல் இல்லாத நடிப்பு தற்போது பாராட்டுகளை பெற்று வருகிறது. அந்த வரிசையில் இந்த படத்தில் அவர் இன்வெஸ்டிகேட் செய்யும் முறையும், திரைக்கதையும் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்திருக்கிறது. மேலும் இது போன்ற கதாபாத்திரம் அவருக்கு பொருந்துவதாகவும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

அது மட்டுமல்லாமல் இடைவேளை காட்சியின் மேக்கிங் வேற லெவலில் இருப்பதாகவும், சரியான கதைக்களத்தில் படம் பயணிப்பது பிளஸ் ஆக அமைந்திருப்பதாகவும் கருத்துக்கள் வெளிவந்துள்ளது. அதேபோன்று ரித்திகா சிங் கதாபாத்திரமும் பாராட்டுகளை பெற்று வருகிறது.
Also read: விஜய் ஆண்டனி கூட நடிச்சு பத்து பைசா பிரயோஜனம் இல்ல.. பட வாய்ப்பு இல்லாமல் கதறும் 5 நடிகைகள்
மேலும் படம் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை பல சஸ்பென்ஸ் நிறைந்தது மட்டுமின்றி யூகிக்க முடியாத படியாகவும் இருப்பது இயக்குனரின் புத்திசாலித்தனத்தை காட்டுகிறது. அதுவே படத்தை தூக்கி நிறுத்துவதாகவும் ரசிகர்கள் பாசிட்டி விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர்.

இப்படி நல்ல கருத்துக்களை பெற்று வரும் இந்த கொலை இனிவரும் நாட்களிலும் இதே விமர்சனங்களை பெறும் என்பதில் சந்தேகம் இல்லை. அது மட்டுமல்லாமல் வசூலும் படத்திற்கு லாபகரமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
