திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2024

பிச்சைக்காரனா இல்ல மொக்கைக்காரனா.? அனல் பறக்கும் விஜய் ஆண்டனி பட ட்விட்டர் விமர்சனம்

ஆல் இன் ஆல் அழகு ராஜாவாக கலக்கி கொண்டிருக்கும் விஜய் ஆண்டனி தற்போது இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கிறார். இசையமைப்பாளர், பாடகர், நடிகர், தயாரிப்பாளர், எடிட்டர் போன்ற பரிமாணங்களுடன் கலக்கி கொண்டிருக்கும் அவர் பிச்சைக்காரன் 2 திரைப்படத்தின் மூலம் இயக்குனராகவும் மாறி இருக்கிறார்.

pichaikaran2-review
pichaikaran2-review

கடந்த 2016 ஆம் ஆண்டு வெளிவந்த இதன் முதல் பாகம் எதிர்பார்க்காத அளவுக்கு அதிரி புதிரி ஹிட் அடித்தது. அதைத்தொடர்ந்து இன்று பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி உள்ள இப்படத்தை பார்த்த ரசிகர்கள் தங்கள் விமர்சனத்தை சோசியல் மீடியாவில் தெரிவித்து வருகின்றனர்.

Also read: ருத்ர தாண்டவத்திற்கு தயாரான விஜய் ஆண்டனி.. பட்டையை கிளப்பும் பிச்சைக்காரன் 2 ட்ரெய்லர்

அந்த வகையில் பிச்சைக்காரன் 2 படத்திற்கு கலவையான விமர்சனங்கள் தான் வந்து கொண்டிருக்கிறது. அதிலும் சில ஆடியன்ஸ் படம் பிடிக்கவில்லை என்று வெளிப்படையாகவே கூறி வருகின்றனர். ஏனென்றால் படத்தின் விஷுவல் காட்சிகள் ரசிகர்களை கொஞ்சம் அதிருப்தி அடைய வைத்திருக்கிறது.

pichaikaran 2-review
pichaikaran 2-review

மேலும் சுவாரசியம் இல்லாத திரை கதையும், எமோஷனல் காட்சிகளும் படத்தில் ரசிகர்களை ஒன்ற வைக்க தவறியுள்ளது. அப்படி பார்த்தால் குறிப்பிட்டு சொல்லும் படியான சில காட்சிகள் தான் நன்றாக இருக்கிறது என்றும் மொத்தத்தில் பிச்சைக்காரன் 2 ஏமாற்றி இருக்கிறது எனவும் ரசிகர்கள் கூறுகின்றனர்.

pichaikaran2-movie-review
pichaikaran2-movie-review

Also read: பிச்சைக்காரன் 2 பட கதை இதுதான்.. தேறி வரும் விஜய் ஆண்டனிக்கு அடுத்தடுத்த சோதனை

அது மட்டுமின்றி எப்போதும் பாடல் காட்சியில் கலக்கும் விஜய் ஆண்டனி இதில் கொஞ்சம் சொதப்பி இருக்கிறார் எனவும் முதல் பாதியில் வரும் பாடல்கள் அவ்வளவாக ஈர்க்கவில்லை எனவும் கருத்துக்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. இதில் இடைவேளை காட்சி கொஞ்சம் ஆறுதலை கொடுத்திருக்கிறதாம்.

review-pichaikaran2
review-pichaikaran2

இப்படியாக வெளிவந்து கொண்டிருக்கும் விமர்சனங்களில் முதல் பாதியில் வரும் 20 நிமிடங்கள் மட்டுமே படத்தின் பக்க பலமாக இருக்கிறது. அதை தொடர்ந்து சலிக்க வைக்கும் வகையில் இருக்கும் திரைக்கதை, கனெக்ட் ஆகாத எமோஷனல் காட்சிகள் ஆகியவை நெகட்டிவாக மாறி இருக்கிறது. ஆக மொத்தம் ட்ரெய்லர் மூலம் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த பிச்சைக்காரன் 2 இப்போது ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது.

Also read: தமிழ் புத்தாண்டை குறிவைத்து ரிலீஸ் ஆகும் 5 படங்கள்.. பிச்சைக்காரன் 2-வை டீலில் விட்ட விஜய் ஆண்டனி

- Advertisement -

Trending News