செவ்வாய்க்கிழமை, ஜனவரி 28, 2025

விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் 2 மொக்கை வாங்கியது.. இதுல பார்ட் 3 வேறயா

விஜய் ஆண்டனி நடிப்பில் 2016 ஆம் ஆண்டு வெளிவந்த பிச்சைக்காரன் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் இதனுடைய இரண்டாம் பாகம் மூன்று தினங்களுக்கு முன் வெளியாகி உள்ளது. முதல் பாகம் போலவே இப்படம் ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி இருக்கும் என்று எதிர்பார்த்தால் அவர்கள் ரொம்பவே கழுவி ஊற்றும் வகையில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

பிச்சைக்காரன் 2 படத்தை விஜய் ஆண்டனியை இயக்கி அதில் அவரை நடித்திருக்கிறார். அத்துடன் எப்பொழுதும் இவருடைய பாடல் என்றாலே அதற்கு ஒரு தனி சுவாரஸ்யம் அமைந்ததாக இருக்கும். அது இந்த படத்தில் சுத்தமாகவே இல்லை என்று ரசிகர்கள் ஓபன் ஆக சொல்லி வருகிறார்கள். இப்படத்தில் புதுமையான விஷயத்தை கையாண்டு உள்ளதால் ரசிகர்களுக்கு இப்படம் திருப்தி அளிக்கும் என்று மிகவும் எதிர்பார்த்தார்.

Also read: தட்டு தடுமாறும் விஜய் ஆண்டனி.. அதிர்ச்சியை கிளப்பிய பிச்சைக்காரன் 2 முதல் நாள் வசூல் ரிப்போர்ட்

ஆனால் அவர்களுக்கு மிகவும் சுவாரசியமும் குறைந்து நெகட்டிவ் விமர்சனங்களை கொடுத்து வருகிறார்கள். அதனால் வணிக ரீதியாகவும் ரொம்பவே அடிபட்டு வருகிறது. ஆனால் இந்த படத்திற்காக தான் எவ்வளவோ ரிஸ்க்கான வேலைகளை செய்து அதிலும் உயிரை பணயம் வைத்து இவரை களத்தில் இறங்கி இருந்தார். அதெல்லாம் மீண்டு வருவதற்கு படாத பாடு பட்டு வந்தார்.

அதற்கு பெரிய ஆறுதலாக இப்படம் வெற்றி பெற்றிருந்தால் இதற்கு மிகவும் சிறப்பாக அமைந்திருக்கும். இப்படி பிச்சைக்காரன் 2 படம் எதிர்பார்த்த அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும் மிக துணிச்சலாக இன்னொரு விஷயத்திலும் இறங்கி இருக்கிறார். அதாவது இப்படத்தை சென்னையில் ரசிகர்களுடன் திரையரங்கில் பார்த்த விஜய் ஆண்டனி இடைவெளியின் போது ரசிகர்களிடம் பிச்சைக்காரன் படத்தின் மூன்றாவது பாகம் வெளியாகும் என்று அவர்களிடம் நேரடியாக அறிவிப்பு கொடுத்திருக்கிறார்.

Also read: பிச்சைக்காரன் வெளியான 24 மணி நேரத்தில் இப்படி ஒரு சம்பவமா? விஜய் ஆண்டனி சார் என்ன இதெல்லாம்

ஏற்கனவே பிச்சைக்காரன் 2 திரைப்படம் வெளியாகி வந்த முதல் நாளில் மட்டுமே தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் சேர்த்து 7.75 கோடி வசூல் செய்திருப்பதாக படக்குழு அறிவித்திருந்தனர். இப்படி இவர்கள் போட்ட காசையை எடுக்க முடியுமா என்று இருக்கும் நிலைமையில் மறுபடியும் மூன்றாம் பாகம் என்றால் எந்த தைரியத்தில் இறங்குகிறார் என்று ரசிகர்களுக்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்துகிறது.

ஆனாலும் இவருடைய விடாமுயற்சிக்கும் தன்னம்பிக்கைக்கும் ஏற்றது போல பிச்சைக்காரன் 3 படமாவது இவருக்கு கை கொடுக்க வேண்டும். தனிக்காட்டு ராஜாவாக இயக்குனர், நடிகர், எடிட்டிங், இசையமைப்பாளர் போன்று இவரிடம் இருக்கும் அனைத்து ராஜதந்திரங்கள் பயன்படுத்துவதால் இவருக்கு வெற்றி கிடைக்கும் என்று எதிர்பார்ப்போம்.

Also read: முதல் பாக மேஜிக் விஜய் ஆண்டனிக்கு கை கொடுத்ததா.? பிச்சைக்காரன் 2 எப்படி இருக்கு? முழு விமர்சனம்

Trending News