வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

தலக்கணத்தில் ஆடும் விஜய் ஆண்டனி.. தெறித்து ஓடும் தயாரிப்பாளர்கள்

இசையமைப்பாளராக அவதாரம் எடுத்து அதன் பின் நடிப்பில் முத்திரை பதித்து இன்று சினிமாவில் சலீம், இந்தியா-பாகிஸ்தான், பிச்சைக்காரன், சைத்தான், எமன், அண்ணாதுரை போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்து தனக்கென நிலையான ஒரு இடத்தை பிடித்துள்ளார் விஜய் ஆண்டனி.

இந்த வருடம் இவருடைய நடிப்பில் செந்தில்குமார் இயக்கிய காக்கி திரைப்படமும், பாபு யோகேஸ்வரன் இயக்கிய தமிழரசன் திரைப்படம், விஜய் ஆண்டனி இயக்கி நடிக்கும் பிச்சைக்காரன் 2 படமும், விஜய் மில்டன் இயக்கிய மழை பிடிக்காத மனிதன் போன்ற படமும்  திரைக்கு வர காத்திருக்கிறது.

வள்ளிமயில், கொலை, ரத்தம், அக்னி சிறகுகள், மத கஜ ராஜா போன்ற படங்களை தன்வசம் வைத்து வரிசையாக படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் அவர், இப்போது சம்பளத்தை ரூபாய் 4 கோடியில் இருந்து ரூபாய் 6 கோடி வரை உயர்த்தி விட்டார்.

படங்கள் ஓடாவிட்டாலும் சம்பள விஷயத்தில் மனிதர் மிகவும் குறியாக இருந்து வருகிறாராம். பேராசை பிடித்த விஜய் ஆண்டனி இரண்டு கோடியை முதலில் அட்வான்சாக கேட்கும் அவர் இப்பொழுது எல்லாவற்றிலும் பங்கும் கேட்கிறாராம்.

நடித்ததில் இரண்டு படங்கள் ஓடிவிட்டது என்பதற்காகவே, இப்படி சம்பளத்தையும் உயர்த்தி லாபத்தில் பங்கு கேட்பதால் இவரை அணுகுவதற்கு நிறைய தயாரிப்பாளர்கள் யோசிக்கின்றனர். இயல்பாக நடிக்கும் இவருடைய நடிப்பு ஒரு சில ரசிகர்களுக்கு பிடிக்கிறது.

ஆனால் தற்போது முற்றிலும் மாறி இப்படி தலைக் கனமாய் நடந்துகொள்ளும் ஆண்டனி இந்த ஆட்டிட்யூட்-ஐ மாற்றினால் தமிழ் சினிமாவில் நிச்சயமாக நல்ல ஒரு இடத்தில் அமர்வார் என்று கோடம்பாக்கம் பேசி வருகிறது.

Trending News