புதன்கிழமை, ஜனவரி 15, 2025

கெட்ட வார்த்தை கற்றுக் கொடுக்கும் விஜய் ஆண்டனி.. கல்லா கட்ட இப்படி ஒரு விளம்பரமா?

கடந்த 2016 ஆம் ஆண்டு இயக்குனர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் பிச்சைக்காரன். அதைத் தொடர்ந்து கிட்டத்தட்ட ஏழு வருடங்களுக்கு பிறகு பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகத்தை கையில் எடுத்திருக்கிறார் விஜய் ஆண்டனி. மேலும் இந்த படத்தை அவரே இயக்கவும் செய்திருக்கிறார்.

பிச்சைக்காரன் 2 திரைப்படத்தில் விஜய் ஆண்டனி நடிப்பதோடு படத்தை இயக்கி, தயாரித்து, படத்தொகுப்பும் செய்கிறார். முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் இந்த படத்தை நம்பி மொத்தமாக களமிறங்கி இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். படத்தின் படப்பிடிப்பு வேலைகள் அனைத்தும் நிறைவுற்ற நிலையில் ஃபர்ஸ்ட் சிங்கிள் தற்போது வெளியாகி இருக்கிறது.

Also Read:பில்டிங் ஸ்ட்ராங் பேஸ்மெண்ட் வீக்.. விபத்தில் இருந்து தப்பித்த விஜய் ஆண்டனிக்கு வந்திருக்கும் புது பிரச்சனை

இப்போதெல்லாம் வருகிற பாடல்களில் ஏதாவது ஒரு புதிய வார்த்தை அறிமுகப்படுத்துவது என்பது ட்ரெண்டாகி விட்டது. அந்த வரிசையில் விஜய் ஆண்டனி பிக்கிலி என்னும் வார்த்தையை அறிமுகப்படுத்தி இருக்கிறார். மேலும் இது நான் புதிதாக கண்டுபிடித்த கெட்ட வார்த்தை என்று கூட அவருடைய சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு இருக்கிறார்.

ஏழைகளை ஏமாற்றுபவனுக்கு நா வச்ச பேரு, நல்லவன நோகடிப்பான் நம்பி வந்தா ஆப்படிப்பான் , கூட இருந்தே குழி பறிப்பான் தூங்க வச்சு கழுத்தறுப்பான், போன்ற வார்த்தைகளுடன் இந்த பாடல் அமைந்திருக்கிறது. இந்த பாடலுக்கு இசை அமைத்து, எழுதி, பாடியது அனைத்துமே விஜய் ஆண்டனி தான். தற்போது வெளியான இந்த பாடல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

Also Read:அஜித் மாதிரி நானும் செய்வேன் என்பதால் வந்த விபரீதம்.. உயிருக்கு போராடும் நிலையில் விஜய் ஆண்டனி

விஜய் ஆண்டனி தற்போது சினிமாவில் நடிப்பதில் பிஸியாக இருந்தாலும் சில வருடங்களுக்கு முன்னால் தமிழ் சினிமா பாடல்களில் ஒரு புதிய ட்ரெண்டை கொண்டு வந்தவர் இவர்தான். இவரது இசையில் வெளியான ஆத்திச்சூடி என்னும் பாடல் மிகப்பெரிய ஹிட் அடித்தது. அதேபோன்று பிக்கிலி பாடல் மூலம் பழைய டிரெண்டுக்கு மாறி இருக்கிறார் இவர்.

பிச்சைக்காரன் 2 திரைப்படத்தில் விஜய் ஆண்டனி உடன் காவியா தாபர், மன்சூர் அலிகான், யோகி பாபு , ஜான் விஜய், ஒய் ஜி மகேந்திரா போன்ற நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர். இந்த படம் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு அன்று ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read:ஹிட்டு கொடுக்க வேற வழி தெரில குமாரு.. சூப்பர் ஹிட்டான படத்தின் இரண்டாம் பாகத்தில் விழுந்த விஜய் ஆண்டனி

Trending News