செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

7 வயதில் அப்பாவின் மரணம்.. 16 வயதில் தவிக்க விட்ட மகள், நிலைகுலைந்து போன விஜய் ஆண்டனி

Vijay Antony: இன்று காலையிலேயே மனதை கனக்க வைக்கும் அளவுக்கு ஒரு துயர செய்தி வெளியாகி ஒட்டு மொத்த மீடியாவையும் உலுக்கியது. 16 வயதான விஜய் ஆண்டனியின் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பலரையும் நம்ப முடியாத அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

அதைத்தொடர்ந்து தற்போது விஜய் ஆண்டனி மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கு திரை பிரபலங்கள் பலரும் தங்கள் ஆறுதல்களை கூறி வருகின்றனர். ஆனால் எந்த வார்த்தைகளும் அவரை இந்த வலியில் இருந்து மீட்டுக் கொண்டு வர முடியாது. ஏற்கனவே அவருடைய ஏழு வயதில் தந்தையின் தற்கொலையை பார்த்து கலங்கிப்போன அவருக்கு தற்போது மகள் மூலம் அடுத்த துயரம் நிகழ்ந்துள்ளது.

Also read: பல கோடியில் புரளும் விஜய் ஆண்டனியின் சொத்து மதிப்பு.. கைவசம் இத்தனை கார்களா?

பொதுவாகவே விஜய் ஆண்டனி குழந்தைகளை அவர்களின் போக்கில் இயல்பாக சுதந்திரமாக விட வேண்டும் என்று நினைப்பவர். இதை பல பேட்டிகளில் அவர் வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் தற்கொலை என்பது எதற்கும் தீர்வாக முடியாது. என் அப்பாவின் அந்த முடிவின் மூலம் நான் நிறைய வலிகளை கடந்து வந்திருக்கிறேன்.

அதனால் தான் நான் யாரிடமும் பேசாமல் ஒதுங்கியே இருக்கிறேன் என்று அவர் ஒரு முறை கூறியிருந்தார். அப்படிப்பட்டவரை தவிக்க விட்டுச் செல்ல அந்த குழந்தைக்கு எப்படி மனசு வந்தது என்றுதான் இப்போது பலரும் வேதனையுடன் பேசி வருகின்றனர். அந்த வகையில் விஜய் ஆண்டனிக்கு மீரா, லாரா என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர்.

Also read: என்னையும் ஏஆர் ரகுமானையும் தொடர்பு படுத்திய பொய்யான வதந்தி.. அதிரடி அறிவிப்பை வெளியிட்ட விஜய் ஆண்டனி

அதில் மூத்த மகள் 12 ஆம் வகுப்பு படித்து வரும் நிலையில் திடீரென இப்படி ஒரு விபரீத முடிவை எடுத்தது எதனால் என்ற கேள்வியும் இப்போது எழுந்துள்ளது. அளவுக்கு அதிகமான மன அழுத்தம் என்று கூறப்பட்டாலும் போலீஸ் இது குறித்த விசாரணையில் தற்போது இறங்கி இருக்கின்றனர். அதன் முதல் கட்டமாக மீராவின் நண்பர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

அது மட்டுமல்லாமல் அவருடைய செல்போனும் ஆராயப்பட்டு வருகிறது. அதனால் விரைவில் இந்த தற்கொலைக்கான காரணம் என்ன என்பது தெரியவரும். மேலும் விஜய் ஆண்டனி நடித்த கொலை படத்தில் கூட இப்படி ஒரு காட்சி இடம் பெற்று இருக்கும். அதில் விபத்து மூலம் அவருடைய மகள் இறப்பது போல காட்டப்பட்டிருந்தது. அதேபோன்று நிஜத்திலும் இப்படி ஒரு துயரம் அவருக்கு நிகழ்ந்து விட்டதே என்று தற்போது ரசிகர்கள் வருத்தத்துடன் கூறி வருகின்றனர்.

Also read: விஜய் ஆண்டனியின் மகள் தூக்கிட்டு தற்கொலை.. காரணத்தைக் கேட்டு அதிர்ந்த திரையுலகம்

Trending News