புதன்கிழமை, ஜனவரி 15, 2025

ஓட்டுக்கு காசு கொடுத்தா வாங்குங்க.. தேர்தல் நேரத்தில் வான்டடா வந்து சிக்கிய விஜய் ஆண்டனி

Actor Vijay Antony: தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் தமிழகமே பரபரப்பாக இருக்கிறது. ஒவ்வொரு கட்சியும் மக்களை கவர்வதற்கான வாக்குறுதிகளையும் அள்ளி வீசிக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் மக்களின் தீர்ப்பு எப்படி இருக்கும் என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்நிலையில் விஜய் ஆண்டனி வான்டடா வந்து ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

அவர் நடித்துள்ள ரோமியோ விரைவில் வெளிவர இருக்கிறது. அதன் பிரமோஷனில் பிஸியாக இருக்கும் அவர் செய்தியாளர் சந்திப்பில் ஒரு விஷயத்தை குறிப்பிட்டுள்ளார்.

விஜய் ஆண்டனி கிளப்பிய சர்ச்சை

அதாவது ஓட்டுக்காக கட்சியினர் தலைக்கு இவ்வளவு என பணம் கொடுத்து ஆதரவு தேடுவார்கள். இதை தடுக்க தேர்தல் ஆணையம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

அதைப் பற்றி கூறியிருக்கும் விஜய் ஆண்டனி ஓட்டுக்கு பணம் வாங்குவது தவறுதான். ஆனால் வறுமை, சூழ்நிலை காரணமாக அதை வாங்கிக் கொள்ளலாம்.

அதேபோல் காசு வாங்கி விட்டோமே என அந்த கட்சிக்கு தான் ஓட்டு போட வேண்டும் என்று இல்லை. நல்லவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

எங்க தலைக்கு தில்லா பாத்தியா என்ற கதையாக தான் இருக்கிறது விஜய் ஆண்டனியின் பேச்சு. ஆனாலும் அவர் கூறியிருக்கும் சமாச்சாரம் யோசிக்கவும் வைத்துள்ளது.

Trending News