விஜய் ஆண்டனி எப்பொழுதுமே இவர் முகத்தில் ஒரு சந்தோஷம் இருக்காது. இவர் முகம் அப்படியே செட் ஆகிவிட்டது. மக்களும் ஒரே முகத்தை பார்த்து இவரை சினிமாவில் கொண்டாடத் தொடங்கிவிட்டனர். இடையில் அவருக்கு நிறைய பர்சனல் சங்கடங்கள். 12ஆம் வகுப்பு படிக்கும் இவரது மகள் தற்கொலை செய்து விட்டார். அதிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வந்துள்ளார் விஜய் ஆண்டனி.
இவர் எடுக்கும் படங்களுக்கு நெகட்டிவ் டைட்டில் மட்டுமே வைக்கிறார். ஏற்கனவே இவரது சோகமான தோற்றம் மற்றும் இவர் வைக்கும் நெகட்டிவ் டைட்டில்கள் என இவரை ஒரு சோக ஹீரோவாக அனைவரிடம் கொண்டு சென்றது. இன்று இவர் நடித்து வெளிவந்திருக்கும் படம் மழை பிடிக்காத மனிதன்.
விஜய் மில்டன் இயக்கத்தில் வெளிவந்த இந்த படம் இதுவரை நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. படத்தில் திரைக்கதை நன்றாக இருப்பதாகவும் இதுவரை தமிழ் சினிமாவில் சொல்லப்படாத நிறைய விஷயங்கள் இதில் இருக்கிறது என்று படத்தை பார்த்தவர்கள் கூறி வருகின்றனர்.
8 தோல்விக்கு பின் வரும் மழை பிடிக்காத மனிதன்
விஜய் மில்டன் இயக்கும் இந்த படமும் விஜய் ஆண்டனிக்கு நெகட்டிவ் டைட்டில் ஆக அமைந்துள்ளது. ஆக்சன் திரில்லராக வெளிவந்த இந்த படம் விறுவிறுப்பாக செல்கிறது என அனைவரும் கூறுகின்றனர். விஜய் ஆண்டனியை தவிர சத்யராஜ், பொன்வண்ணன், சரண்யா சரத்குமார் போன்றவர்கள் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு விஜய் ஆண்டனி தான் இசையமைத்துள்ளார். பிச்சைக்காரன், கொலைகாரன, கொலை, சைத்தான், திமிரு பிடித்தவன், எமன் போன்று நெகடிவ் டைட்டிலில் இவர் நடித்த படங்கள் அனைத்தும் தோல்வியை தழுவியது. இப்பொழுது மழை பிடிக்காத மனிதன் நெகட்டிவ் டைட்டிலில் வெளி வந்தாலும் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.
- விஜய் ஆண்டனியை வம்புக்கு இழுக்கும் மண்ட கோளாறு
- விஜய் ஆண்டனிக்கு எதிரா ஒன்னு கூடிய அரைவேக்காடுகள்
- பிச்சைக்காரனில் சம்பாதித்ததை மொத்தமாய் இழந்த விஜய் ஆண்டனி