Romeo Twitter Review: விஜய் ஆண்டனி தான் இப்போது பிஸியான நடிகராக இருக்கிறார். இந்த வருடம் அவருடைய நடிப்பில் அடுத்த அடுத்த படங்கள் வெளிவர இருக்கிறது.
அதில் தற்போது அவர் நடித்துள்ள ரோமியோ ரம்ஜான் ஸ்பெஷல் ஆக வெளிவந்துள்ளது. விநாயக் வைத்தியநாதன் இயக்கியுள்ள இப்படத்தில் மிருணாளினி ரவி விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

வெளி வருவதற்கு முன்பே சர்ச்சைகளை சந்தித்த இதன் டிவிட்டர் விமர்சனத்தை இங்கு காண்போம். இதில் படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் பாசிட்டிவ் விமர்சனங்களை தான் கொடுத்து வருகின்றனர்.

அறிவழகன் ஆக வரும் விஜய் ஆண்டனி திருமணத்திற்கு பிறகு மனைவியை காதல் செய்யும் கேரக்டரில் நடித்துள்ளார். சென்டிமென்ட், காமெடி, ரொமான்ஸ் என கலவையாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

பின்னணி இசை, இடைவேளை காட்சி என அனைத்தும் சிறப்பாக இருப்பது பிளஸ் என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். அதில் இயக்குனர் முதல் படம் என்று சொல்ல முடியாத அளவுக்கு பீல் குட் அனுபவத்தை கொடுத்துள்ளார்.

அதேபோன்று மிருணாளினியின் நடிப்பும் நன்றாக இருக்கிறது. மேலும் கிளைமேக்ஸ் காட்சியும் திருப்தியாக இருப்பதால் படத்தை தாராளமாக பார்க்கலாம் என கமெண்ட்டுகள் வந்து கொண்டிருக்கிறது.
இப்படி முதல் நாளிலேயே ரசிகர்களை கவர்ந்திருக்கும் இப்படம் அடுத்தடுத்த நாட்களில் இதை தக்க வைத்துக் கொள்ளுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.