வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ரத்தமும் சதையுமாக ஒட்டி வரும் விஜய், அட்லீ.. இவங்க அலப்பறை கொஞ்சம் ஓவராக தான் போகுது போல

Actor Vijay and Atlee: இயக்குனர் அட்லீ, பிகில் மற்றும் மெர்சல் படத்தை தொடர்ந்து அடுத்ததாக விஜய்க்கு தான் படத்தை இயக்குவார் என்று எதிர்பார்த்து நிலையில், திடீரென்று பாலிவூட்டில் ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை எடுக்கப் போய்விட்டார். அப்பொழுது கிளிக்கு ரெக்கை முளைச்சு போச்சு அதன் ஒரேடியா பறந்து போச்சு என்று பலரும் அட்லீயே நக்கல் அடித்து வந்தார்கள்.

ஆனால் அதையெல்லாம் உண்மை இல்லை என்று நிரூபிக்கும் விதமாக ஜவான் படத்தின் ஆடியோ லான்ஜில் தனது பேச்சின் மூலம் தெளிவுபடுத்தி விட்டார் அட்லீ. அதாவது இரு தினங்களுக்கு முன் தனியார் கல்லூரியில் மிகப் பிரமாண்டமாக ஜவான் இசை வெளியீட்டு விழா நடந்தது. அதில் அட்லீ மேடையில் பேச ஆரம்பித்த பொழுது விஜய்யை பற்றி தான் மூச்சுக்கு 300 தடவை என் அண்ணன் என்று இவரை தூக்கி வைத்தே பேசி வந்தார்.

Also read: விஜய் தேவரகொண்டா-சமந்தா கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆனதா.? குஷி எப்படி இருக்கு, அனல் பறக்கும் ட்விட்டர் விமர்சனம்

இவர் விஜய்யை பற்றி பேசப் பேச அங்க இருந்த ரசிகர்கள் அனைவரும் மேடையே அதிரும்படி கைதட்டல்களை தெறிக்க விட்டார்கள். அத்துடன் பலருக்கும் திடீரென்று இவர்களுக்குள் இப்படிப்பட்ட நெருக்கம் எப்படி வந்தது என்று கேள்வியும் முன் வைத்தார்கள். அதற்கு சரியான பதிலளிக்கும் விதமாக அட்லீ உரையாடல் இருந்தது.

அதாவது முதலில் என்னுடைய கம்போர்ட் சோன் இதுதான் என்று அந்த வட்டத்திற்குள்ளேயே நான் இருந்து விட்டேன். அப்பொழுது என்னுடைய அண்ணன் விஜய் தான் என்னை கூப்பிட்டு உனக்கு இருக்கிற திறமைக்கு இங்கேயே சுற்றி விடாதே. முயற்சி செய்து எல்லா பக்கமும் உன் வெற்றியை நிலை நாட்டு என்று என்னை ஊக்கப்படுத்தினார். அத்துடன் என்னிடம் பேசிய கொஞ்ச நேரத்திலேயே எனக்கு ஒரு போன் வந்தது.

Also read: விஜய்யை பகைத்துக் கொண்ட லைக்கா.. 9 வருட பகையை முடிவுக்கு கொண்டு வந்த சுபாஸ்கரன் 

அதில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் உங்களை சந்திக்க நினைக்கிறார் என்ற அழைப்பு வந்தது. இதை பார்க்கும் பொழுது இந்த சிபாரிசை கண்டிப்பாக விஜய் தான் பண்ணி இருப்பார் என்று தெரிந்திருக்கிறது. விஜய் இப்படி செய்ததற்கு காரணம் அடலீயை தன் தம்பி போலவும், ரத்தமும் சதையுமாக பார்ப்பதினால் தான். அதற்காக தான் விஜய் அவருக்கு உதவி செய்திருக்கிறார்.

அந்த வகையில் எந்த ஒரு விஷயத்திலும் கலந்து கொள்ளாத விஜய், அட்லீ வீட்டு பங்க்ஷன் என்றால் முதல் ஆளாக ஓடுகிறார். அந்த வகையில் தான் ஷாருக்கான் இடமும் சிபாரிசு பண்ணியிருக்கிறார். மேலும் இவர்கள் இருவரும் சேர்ந்து படம் பண்ணினால் விஜய் அவருடைய சம்பளத்தை மட்டும் பிக்ஸ் பண்ணுவதோடு இல்லாமல், அட்லீக்கும் இவ்வளவு கொடுங்கள் என்று தயாரிப்பாளரிடம் சொல்லும் அளவிற்கு நெருக்கமாய் இருக்கிறார்.

Also read: நம்ம வீட்டு தயாரிப்பாளர்கள் எல்லாம் இளிச்சவாய்களா.! அட்லீ செய்யும் மட்டமான வேளையில் சிக்கும் நயன்தாரா

Trending News